‘முன்ஜாமின் மனு தள்ளுப்படி’.. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகிறாரா ப.சிதம்பரம்..?
முகப்பு > செய்திகள் > இந்தியாமுன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கோரிய முன்ஜாமின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 2007 -ம் ஆண்டு ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி முதலீடு பெறுவதற்கு அனுமதி அளித்ததில் முறைக்கேடு நடந்ததாக கூறப்படுகிறது. இதில் கார்த்திக் சிதம்பரம் தலையீட்டின் பேரில் லட்சம் கொடுக்கப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. இதனால் 2017 -ம் ஆண்டு இதுகுறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
இதனை அடுத்து இந்த புகார் தொடர்பாக விசாரிக்க ப.சிதம்பரம் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனக் கூறி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் வலியுறுத்தின. இதனால் கடந்த ஆண்டு ப.சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு அளித்திருந்தார். இந்நிலையில் இன்று முன்ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து அந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.