'கல்லூரி' செமஸ்டர் தேர்வுகள் 'ரத்து'! - அதிரடியாக அறிவித்த 'மாநிலம்'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டும், சில மாநிலங்கள் பள்ளி தேர்வுகளை ரத்து செய்தும் வருகின்றன.

'கல்லூரி' செமஸ்டர் தேர்வுகள் 'ரத்து'! - அதிரடியாக அறிவித்த 'மாநிலம்'!!!

இந்நிலையில், கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்த வேண்டியது கட்டாயம் என யுஜிசி சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தது. அதே போல, இந்த தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தது. இந்த முடிவிற்கு தமிழக அரசு, இப்போதுள்ள நிலையில் செப்டம்பர் மாதத்திற்குள் கல்லூரி தேர்வுகளை முடிப்பது என்பது இயலாத காரியம் என தெரிவித்திருந்தது.

இதனையடுத்து, தற்போது டெல்லி மாநிலத்தில் கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் கொரோனா பரவல் அதிகமாகி வரும் நிலையில், டெல்லி அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. எனவே, மாணவர்களின் மதிப்பீடு நடைமுறைகள் குறித்து அந்தந்த பல்கலைக்கழகம் முடிவு செய்து கொள்ளும்படி மாநில துணை முதல்வர் மனோஜ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்