'1 KG வேஸ்ட் பிளாஸ்டிக் கொடுத்திட்டு...' இலவசமா 'இத' வாங்கிட்டு போங்க...! - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டெல்லி மாநகராட்சியின் GARBAGE CAFE...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மனிதர்கள் வசதியாக வாழ்வதற்காக புதுப்புது வழிமுறைகளை கண்டுபிடிக்கும் போதும், அதை செயல்முறைப்படுத்தும் போதும் அவை சுற்றுப்புறத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய அபாயமும் கூடவே வருகிறது.

'1 KG வேஸ்ட் பிளாஸ்டிக் கொடுத்திட்டு...' இலவசமா 'இத' வாங்கிட்டு போங்க...! - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டெல்லி மாநகராட்சியின் GARBAGE CAFE...!

அதுபோல் ஒன்றுதான் நெகிழி கழிவுகள் அதாவது பிளாஸ்டிக். தற்போது பெருமளவு சுற்றுப்புறச் சூழலுக்கு தீங்கு விளைவிப்பவையாகவும் எனைய உயிர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பது இந்த பிளாஸ்டிக் கழிவுகள் தான்.

இந்நிலையில் அதனை குறைக்கும் நோக்கில் தெற்கு டெல்லி மாநகராட்சி சார்பில் ஒரு புதுவிதமான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்திட்டத்தின் பெயர் GARBAGE CAFE.

அதன்படி ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்துவிட்டு மாநகராட்சியின் 'GARBAGE CAFE'வில் உணவை இலவசமாக சாப்பிடும் வழிவகையை செய்துள்ளது டெல்லி மாநகராட்சி. மேலும் இந்த திட்டத்தின் கீழ் சுமார் 20-க்கும் மேற்பட்ட GARBAGE CAFE உணவகங்களை மாநகராட்சி இயக்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இம்மாதிரியான உணவகங்கள் இந்தியாவின் சில மாநிலங்களில் இயங்கியதும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்