இவ்வளவு காஸ்ட்லியான வாட்ச் இதுவரை பிடிபட்டதே இல்ல... ஏர்போர்ட்டை பரபரக்க வைத்த பயணி.. அதிர்ந்துபோன அதிகாரிகள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மிக விலையுயர்ந்த கைக்கடிகாரங்களை கடத்த முயன்ற நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர்.
Also Read | T20 போட்டியில் இரட்டை சதம்.. கிரவுண்ட்ல வெஸ்ட் இண்டீஸ் வீரர் காட்டிய வானவேடிக்கை.. மிரண்டு போன ஆடியன்ஸ்..!
கடத்தல்
வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதைப்பொருள், வெளிநாட்டு கரன்சிகளுடன் இந்தியா வரும் நபர்களை இந்திய விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து கைது செய்து வருகின்றனர். பணத்திற்காக இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக காவல்துறை அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். இதுபோன்ற கடத்தலில் ஈடுபடும் நபர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டாலும், கடத்தல் முயற்சிகள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கின்றன.
துபாய் பயணி
அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து டெல்லி வந்த பயணி ஒருவரிடமிருந்து மிக விலையுயர்ந்த வாட்ச் மற்றும் பிரேஸ்லெட் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. கடந்த 4 ஆம் தேதி துபாயில் இருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவர் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்திருக்கிறது. இதனையடுத்து அவரை அதிகாரிகள் பரிசோதனை செய்திருக்கின்றனர். அப்போது, அவர் கொண்டு வந்த பையில் பல வாட்ச்கள் இருப்பது தெரியவந்திருக்கிறது.
பரிசோதனை
இதனையடுத்து அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியிருக்கின்றனர். அவரிடம் இருந்து விலையுயர்ந்த 7 வாட்ச்கள், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வைர கற்கள் பதிக்கப்பட்ட தங்க பிரேஸ்லெட், ஐபோன் 14 Pr0 256 GB ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இதற்கு முன்னர் இவ்வளவு விலைமதிப்புள்ள வாட்ச்கள் சிக்கியதில்லை என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். துபாயில் இருந்து வந்த அந்த பயணி கடந்துவந்த பொருட்களின் மதிப்பு 28,17,97,864 ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
சுங்கச் சட்டம், 1962, பிரிவு 110ன் கீழ், மீட்கப்பட்ட பொருட்கள் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல அந்த பயணியை சுங்கச் சட்டம், 1962ன் பிரிவு 104ன் கீழ் அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர். இதனால் விமான நிலையமே பரபரப்புடன் காணப்பட்டது.
மற்ற செய்திகள்