'கொரோனா இருக்கும்னு நடுரோட்ல வச்சு...' 'பஸ்ல இருந்து இறக்கி விட்ட பெண் பலி...' போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்திருக்கு...' - என்ன காரணம்...?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அரசு பேருந்தில் பயணம் செய்த 19 வயது பெண் கொரோனா அறிகுறிகளுடன் காணப்படுவதாக கூறி நடுவழியில் இறக்கிவிட்டதால் மாரடைப்பில் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'கொரோனா இருக்கும்னு நடுரோட்ல வச்சு...' 'பஸ்ல இருந்து இறக்கி விட்ட பெண் பலி...' போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்திருக்கு...' - என்ன காரணம்...?

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக விழிப்புணர்வு இல்லாமல், சில மக்களால் அசம்பாவித சம்பவங்கள் அங்குமிங்கும் நடந்தேறி வருகிறது.

கடந்த ஜூன் 15-ம் தேதி 19 வயதான அன்சிகா யாதவும் அவர் தாயும் டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேச அரசுப் பேருந்தில் சிகோபாபாத்துக்குச் சென்றனர். பயணத்தின் போது அன்சிகாவிற்கு கொரோனா அறிகுறி உள்ளதாக சந்தேகித்த பயணிகள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பேருந்தின் நடத்துனரும், ஓட்டுநரும் சேர்ந்து வலுக்கட்டாயமாக அன்சிகாவையையும் அவரது தாயாரையும் நடு வழியில் இறக்கி விட்டுள்ளனர்.

என்ன செய்வதென்று புரியாமல் தாயும் மகளும் சாலையிலேயே நின்றுள்ளனர். தன்னால் இப்படி நடந்தது என யோசித்து மன உளைச்சலில் இருந்த அன்சிகா அரைமணி நேரத்தில் உயிரிழந்துள்ளார். மேலும் 19 வயது இளம்பெண் இயற்கையாக தான் இறந்ததாகக் கூறி மதுரா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ய மறுத்துவிட்டனர்.

அதையடுத்து உயிரிழந்த  இளம்பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையின் வாயிலாக, அப்பெண் மாரடைப்பால் தான் இறந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் குறித்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரப்பிரதேசக் காவல்துறைக்கு டெல்லி பெண்கள் ஆணையம் உத்தரவிட்டது.

இந்நிலையில் தற்போது காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், தாயும் மகளும் பேருந்தில் இருந்து நடு ரோட்டில் இறக்கிவிடப்பட்டதாகவும், அப்போது வீசிய அனல்காற்றாலும் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அக்குடும்பத்தாரை மீட்டெழ முடியாத சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்