டேக்-ஆஃப் ஆன கொஞ்ச நேரத்துல எஞ்சினில் சிக்கிய பறவை.. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. ஒரே நாள்-ல 3 டைம் இப்படி ஆகிடுச்சு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லி நோக்கி சென்ற விமானம் ஒன்று எஞ்சினில் பறவை சிக்கியதால் உடனடியாக தரையிறக்கப்பட்ட சம்பவம் கவுகாத்தி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எஞ்சினில் சிக்கிய பறவை
நேற்று கவுகாத்தியில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானம், டேக்-ஆஃப் செய்யப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே மீண்டும் கவுகாத்தி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டிருக்கிறது. ஒரு எஞ்சின் பழுதடைந்ததால் விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டதாகவும், பறவை எஞ்சினில் மோதியிருக்கலாம் எனவும் அந்த விமான நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து அனைத்து பயணிகளும் வேறு விமானம் மூலமாக, டெல்லி சென்றடைந்தனர்.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,"விமானம் டேக்-ஆஃப் ஆன போது பறவை மோதியதாக சந்தேகிக்கிறோம். இதனால் விமானம் உடனடியாக மீண்டும் கவுஹாத்தியில் தரையிறக்கப்பட்டது. மற்றொரு விமானம் முழுமையான பரிசோதனைக்கு பிறகு டெல்லிக்கு இயக்கப்பட்டது" எனத் தெரிவித்துள்ளது.
மூன்றாவது நிகழ்வு
நேற்று இதே போன்று, டெல்லியில் இருந்து ஜபல்பூருக்கு பயணத்தை துவங்கிய விமானம் மீண்டும் டெல்லியிலேயே தரையிறக்கப்பட்டிருக்கிறது. கேபின் உள்ளே இருந்த அழுத்த வேறுபாடு காரணமாக விமானம் தரையிக்கப்பட்டதாக அந்த விமான நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த விமானம் 6000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த போது, விமானிகள் கேபின் உள்ளே அழுத்த மாறுபாடு இருப்பதை கண்டறிந்திருக்கின்றனர். இதனையடுத்து மீண்டும் டெல்லி விமான நிலையத்திற்கே விமானத்தினை திருப்பியிருக்கிறார்கள்.
இதேபோல, பீஹார் தலைநகர் பாட்னாவில் இருந்து கிளம்பிய மற்றொரு விமானம், மீண்டும் பாட்னாவிலேயே தரையிக்கப்பட்டிருக்கிறது. டேக்-ஆஃப் செய்யப்பட்ட கொஞ்ச நேரத்தில் விமானத்தின் ஒரு எஞ்சினில் தீ விபத்து ஏற்பட்டதால் விமானம் உடனடியாக தரையிக்கப்பட்டிருக்கிறது. இந்த விமானத்தில் 185 பயணிகள் இருந்ததாகவும் அவர்கள் பத்திரமாக விமான நிலையத்தில் கீழே இறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 3 விமானங்கள் கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே மீண்டும் அவசரமாக தரையிக்கப்பட்ட சம்பவம் குறித்து மக்கள் பரபரப்புடன் பேசி வருகின்றனர்.
மற்ற செய்திகள்