"அடேய் பேராண்டி,, 'அக்கவுண்ட்'ல இருந்த 2 லட்சத்த காணோம் டா..." 'பேரன்' சொன்ன 'பதில்'... ஒரு 'நிமிஷம்' கதிகலங்கி போன 'தாத்தா'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்த மொபைல் கேமான பப்ஜி சில தினங்களுக்கு முன் மத்திய அரசால் தடை செய்யப்பட்டது.

"அடேய் பேராண்டி,, 'அக்கவுண்ட்'ல இருந்த 2 லட்சத்த காணோம் டா..." 'பேரன்' சொன்ன 'பதில்'... ஒரு 'நிமிஷம்' கதிகலங்கி போன 'தாத்தா'!!!

இந்தியாவில் மட்டும் பல கோடி இளைஞர்கள் தினந்தோறும் பல மணி நேரம் பப்ஜி கேமில் செலவழித்து வந்தனர். இந்நிலையில், இந்தியாவில் இந்த கேம் தடை செய்யப்பட்ட அறிவிப்பு பப்ஜி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, டெல்லி மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் கடந்த சில மாதங்களாக பப்ஜி விளையாட்டில் மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டு வந்துள்ளான். இதன் காரணமாக, பப்ஜி விளையாட்டில் உடைகள் மற்றும் கேரக்டர்களை வாங்க 2.3 லட்சம் வரை செலவளித்துள்ளான். இந்த பணத்தை தனது தாத்தாவின் வங்கி கணக்கில் இருந்து அவருக்கே தெரியாமல் பயன்படுத்தி வந்த நிலையில், பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டதால் தான் செலவழித்த பணத்தின் மூலம் சிறுவனுக்கு விளையாட முடியாமல் போயுள்ளது. 

இதனிடையே, தனது வங்கி கணக்கில் இருந்த பணம் என்ன ஆனது என சிறுவனின் தாத்தா கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு சிறுவனோ, உங்களது வங்கி கணக்கு முடக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளான். பி.எஸ்.என்.எல் ஊழியராக இருந்த சிறுவனின் தாத்தா தனது ஓய்வு காலத்திற்கு பிறகு கிடைத்த பென்ஷன் பணத்தை அந்த வங்கி கணக்கில் சேகரித்து வைத்துள்ளார்.

தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக, சைபர் செல்லில் புகாரளிக்கப்பட்ட நிலையில், விசாரணையில் அந்த வங்கிப் பணம் paytm கணக்கு மூலமாக பண பரிமாற்றம் செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனால், வங்கி கணக்கு குறித்து தகவல் தெரிந்த குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணையை மேற்கொண்ட போது, பப்ஜி விளையாட்டிற்காக வேண்டி தான் பணத்தை செலவு செய்ததை சிறுவன் ஒப்புக் கொண்டுள்ளான்.

மேலும், தாத்தாவின் போனில் வந்த OTP மெசேஜ்களை சிறுவன் நீக்கியுள்ளான். இது தொடர்பாக சிறுவனுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது.

மற்ற செய்திகள்