கார் பார்க்கிங்கில் விளையாடிக் கொண்டிருந்த 10 மாத குழந்தை!.. ரிவர்ஸ் வரும் போது நடந்த கோரம்!.. நெஞ்சை நொறுக்கும் சோகம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கார் ரிவர்ஸ் வரும் போது, டயரில் சிக்கிய 10 மாத குழந்தை உடல் சிதைந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார் பார்க்கிங்கில் விளையாடிக் கொண்டிருந்த 10 மாத குழந்தை!.. ரிவர்ஸ் வரும் போது நடந்த கோரம்!.. நெஞ்சை நொறுக்கும் சோகம்!

டெல்லி திலக் நகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் கார் பார்க்கிங்கில், பென்ஸ் கார் ஒன்று ரிவர்ஸ் வந்துள்ளது. அப்போது, அதே குடியிருப்பின் காவலாளியின் 10 மாத பெண் குழந்தை ராதிகா, அங்கே விளையாடிக்கொண்டிருந்தார். இதனை அறியாத கார் ஓட்டுநர் அகிலேஷ் காரை பின்நோக்கி திருப்பியுள்ளார்.

அந்த சமயத்தில் தான் குழந்தை காரில் சிக்கி இருக்கிறது. அதைத் தொடர்ந்து, குழந்தை ராதிகாவை அருகேயுள்ள தீன் தயாள் உபத்யாய் மருத்துவமனைக்கு உடல் சிதைந்த நிலையில் எடுத்துச் சென்றுள்ளார். ஆனால், மருத்துவமனைக்குள் நுழைந்ததும் குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இது குறித்து மேற்கு டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

மற்ற செய்திகள்