'ஊரே புயல்ல கதறிட்டு இருக்கு'... 'புயலை வைத்து நடிகை வெளியிட்ட வீடியோ'... 'கொந்தளித்த நெட்டிசன்கள்'... நடிகை கொடுத்த பதில்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுயல் பாதிப்புக்கு மத்தியில் புகைப்படங்கள் எடுத்த நடிகை தீபிகா சிங்கிற்கு சமூகதளவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அரபிக்கடலில் உருவான ‘டவ்தே’ புயல் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு குஜராத்தில் கரையைக் கடந்தது. இந்த புயல் காரணமாக மராட்டியத்தில் மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடுமையான சேதங்களைச் சந்தித்தன. அந்த மாவட்டங்களில் 12 பேரின் உயிரை இந்த புயல் பறித்தது. மேலும் இந்த புயல் குஜராத், கர்நாடகத்திலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தி பலரின் உயிரையும் பறித்தது.
புயல் காரணமாக நாட்டின் நிதி தலைநகர் மும்பையில் சூறைக்காற்றுடன் மழை கொட்டித்தீர்த்தது. அப்போது காற்றின் வேகம் 114 கி.மீ. ஆக இருந்தது. மேலும் 23 செ.மீ. மழை பெய்தது. குறிப்பாக மும்பை கடலின் சீற்றம் கடுமையாக இருந்தது. கடல் கொந்தளித்ததால், ராட்சத அலைகள் பல அடி உயரம் எழுந்தன. பனை உயரம் எழுந்து தாக்கிய அலையால் மும்பையின் சுற்றுலாத் தலமான கேட் வே ஆப் இந்தியா சேதம் அடைந்தது.
இந்நிலையில் ‘டவ்தே’ புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு இடையே நடனமாடியும், புகைப்படங்கள் எடுத்தும் இன்ஸ்டாகிராமில் நடிகை தீபிகா சிங் பதிவிட்டார். அவரது பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் கொந்தளித்தனர். ஏற்கனவே கொரோனா அச்சத்தில் மக்கள் இருக்கும் நிலையில், தற்போது புயலும் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த நேரத்தில் மக்களைப் பாதுகாப்பாக இருக்கச் சொல்ல வேண்டிய இடத்தில் இருக்கும் நீங்களும் இதுபோன்ற செயலில் ஈடுபடலாமா? என தங்களின் ஆதங்கத்தைக் கொட்டி தீர்த்தனர். இதற்கிடையே புயலை நாம் தடுத்த நிறுத்த முடியாது. அதுவாகவே கடந்து போகும் எனச் சமூகவலைத்தளங்களில் எழுந்த விமர்சனங்களுக்கு நடிகை தீபிகா சிங் பதிலளித்துள்ளார்.
மற்ற செய்திகள்