'ஏன் இத பத்தி சொல்லவே இல்ல?'... 'இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும்'... 'தடுப்பூசியின் நிலை என்ன?'... 'சீரம் நிறுவனத்திற்கு டி.சி.ஜி.ஐ நோட்டீஸ்!'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி விவகாரம் தொடர்பாக சீரம் நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

'ஏன் இத பத்தி சொல்லவே இல்ல?'... 'இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும்'... 'தடுப்பூசியின் நிலை என்ன?'... 'சீரம் நிறுவனத்திற்கு டி.சி.ஜி.ஐ நோட்டீஸ்!'...

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 1 மற்றும் 2ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை இங்கிலாந்தில் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், அங்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒரு நபருக்கு முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்து நாட்டில் இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தை தொடர்ந்து அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 3ஆம் கட்ட பரிசோதனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. இதற்கிடையே இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் பெற்றுள்ள நிலையில், இந்தியாவில் பரிசோதனை வெற்றி பெற்றால் குறைந்த விலையில் கிடைக்கும் என பெரிதும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்படும் கோவிஷீல்ட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனையில் முதல் கட்டம் நிறைவடைந்துள்ளது. மேலும், இந்த கோவிஷீல்டு தடுப்பூசியின் 2 மற்றும் 3ஆம் கட்ட பரிசோதனைக்கு  இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிஜிசிஐ) அனுமதி வழங்கி இருந்தது.  

இந்த பரிசோதனைக்கு நாட்டில் மொத்தம் 17 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, 18 முதல் 55 வயதுக்கு இடைப்பட்ட 1,600 தன்னார்வலர்களும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். கோவிஷீல்டு தடுப்பூசியின் அடுத்தக்கட்ட மனித பரிசோதனை இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அஸ்ட்ராசெனெகா இந்தியாவில் 3ஆம் கட்ட சோதனைகளை நடத்தி வரும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ), இந்திய சோதனைகள் தொடர்கின்றன எனவும், அவை எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இங்கிலாந்தின் சோதனைகள் குறித்து எங்களால் அதிகம் கருத்துத் தெரிவிக்க முடியாது, ஆனால் அவை மேலதிக மறுஆய்வுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன எனவும், அவை விரைவில் மறுதொடக்கம் செய்யப்படும் என அவர்கள் நம்புகிறார்கள் எனவும் கூறியுள்ளது.

இதுதொடர்பாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிஜிசிஐ) சீரம் இன்ஸ்டிடியுட்டிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில், "பிற நாடுகளில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் மனிதப்பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் மற்றும் அது தொடர்பான தகவல்களை சீரம் இன்ஸ்டிடியுட் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் இதுவரை தெரிவிக்கவில்லை. மேலும், இந்தியாவில் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதா என்ற தகவலையும் சீரம் இன்ஸ்டிடியுட் தற்போதுவரை தெரிவிக்கவில்லை. மருந்து செலுத்தப்படுபவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியான கோவிஷீல்டு தடுப்பூசி சோதனையை ஏன் தற்காலிகமாக நிறுத்தி வைக்கக்கூடாது. இந்த நோட்டீசுக்கு சீரம் இன்ஸ்டிடியுட் உடனடியாக பதிலளிக்கவில்லை என்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்