'வெளிநாட்டில்' உயிரிழந்த 'கணவர்'... அடுத்த நாளே மனைவிக்கு 'கொழந்த' பொறந்துருக்கு... மனதை நொறுக்கிய 'துயரம்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் நிதின். இவரது மனைவி பெயர் ஆதிரா. இவர்கள் இருவரும் துபாயில் பணிபுரிந்து வந்த நிலையில் கர்ப்பிணியாக இருந்த ஆதிரா, தன்னை கவனிக்க யாரும் இல்லை. அதனால் எனது சொந்த ஊரான கோழிக்கோட்டிற்கு செல்ல அனுமதி தர வேண்டும் என கூறி உச்சநீதிமன்றத்தின் அனுமதியோடு கடந்த மே மாதம் 7 - ம் தேதி இந்தியா வந்தடைந்தார்.
இந்நிலையில், துபாயில் இருந்த ஆதிராவின் கணவர் நிதின் உயர் ரத்த அழுத்தம், இருதய நோய் காரணமாக தூக்கத்தில் உயிரிழந்துள்ளார். கணவர் இறந்த மறுநாள் ஆதிராவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கணவர் இறந்த செய்தியை அறிந்தால் ஆதிரா மற்றும் குழந்தைக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் பிரசவத்திற்கு முன் கணவரின் மரணம் குறித்த தகவலை ஆதிராவிடம் அவரது குடும்பத்தினர்கள் மறைத்துள்ளனர். நிதின் கடந்த ஆறு ஆண்டுகளாக துபாயில் பணிபுரிந்து வரும் நிலையில் பல்வேறு தன்னார்வ பணிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
நிதினின் மரணம் குறித்து துபாயிலுள்ள நண்பர் ஒருவர் கூறுகையில், 'நிதின் ஏற்கனவே உயர் ரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகளை எடுத்து வந்துள்ளார். அதே போல, அவருக்கு இருதயம் தொடர்பான நோயும் இருந்து வந்துள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என முடிவுகள் வந்துள்ளது. இதனால் அவர் மாரடைப்பு மூலம் தான் உயிரிழந்துள்ளார்' என தெரிவித்தார்.
மேலும், அவரது உடல் சொந்த ஊருக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கணவர் உயிரிழந்த மறுநாள் மனைவி குழந்தை பெற்ற சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்