"மன ஸ்டேடு ஆந்திரா.." அல்லு அர்ஜுனாவாகவே மாறிய டேவிட் வார்னர்.. 'புஷ்பா' ஃபீவரில் சிக்கிக் கொண்ட கிரிக்கெட் வீரர்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

புஷ்பா படத்தின் பாடல்கள் மற்றும் வசனங்கள் தொடர்பான ரீல்ஸ் வீடியோக்கள், ரசிகிர் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், டேவிட் வார்னர் மீண்டும் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

"மன ஸ்டேடு ஆந்திரா.." அல்லு அர்ஜுனாவாகவே மாறிய டேவிட் வார்னர்.. 'புஷ்பா' ஃபீவரில் சிக்கிக் கொண்ட கிரிக்கெட் வீரர்

தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகியிருந்த திரைப்படம் 'புஷ்பா'. சுகுமார் இயக்கத்தில், வெளியாகியிருந்த இந்த திரைப்படம், மிகப் பெரிய ஹிட்டடித்தது.

இதுவரை பார்த்திராத ஒரு அல்லு அர்ஜுன் கதாபாத்திரத்தை, மக்களிடையே சுகுமார் கொண்டு சேர்த்த நிலையில், அதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது.

பாடல்கள் ஹிட்

திரையரங்கில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற 'புஷ்பா', ஓடிடி தளமான அமேசானிலும் வெளியாகி, நேயர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது. இந்த படம் வெற்றி பெற்றதற்கு மிகப் பெரிய காரணமாக, அதன் பாடல்களும் அமைந்திருந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான 'ஸ்ரீ வள்ளி', 'சாமி சாமி', 'ஓ அண்டவா மாமா' ஆகிய பாடல்கள், பலரின் பிளேலிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளது.

வைரல் வீடியோக்கள்

இதன் அனைத்து பாடல்களிலும் ஒரு டிரேட் மார்க் நடன அசைவுகள் உள்ளது. அவை அனைத்தும், ரசிகர்கள் ஆடி, வீடியோக்களாக பதிவேற்றி வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். அது மட்டுமில்லாமல், புஷ்பா படத்தின் வசனங்களையும், பலர் தாங்கள் பேசுவது போல ரீல்ஸ் வீடியோக்களாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

பிரபலங்களை விடாத புஷ்பா

ரசிகர்களைத் தாண்டி, சில சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும், புஷ்பா படத்தின் பாடல்கள் மற்றும் வசனங்களுக்கு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, டேவிட் வார்னர் உள்ளிட்ட பலரும் புஷ்பா படத்தின் பாடல்களுக்கு நடனமாடிய வீடியோக்கள், மிகப் பெரிய அளவில் வைரலாகி இருந்தது.

வார்னரின் டிக் டாக் வீடியோக்கள்

இதில், மற்ற அனைவரையும் விட, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஒரு படி மேலே சென்றுள்ளார். முன்னதாக, கொரோனா தொற்று காலத்தில், வீட்டிலிருந்த படியே தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பல இந்திய திரைப்படங்களின் பாடல்களுக்கு டிக் டாக் வீடியோக்களை தயாரித்து வந்தார். அதே போல, 'பேஸ் ஆப்' மூலம் முகத்தை மாற்றும் சில படங்களின் காட்சிகளையும் வெளியிட்டு வந்தார்.

ரஜினி, விஜய், ஷாருக்கான் என பல நட்சத்திரங்கள் வைத்து, வார்னர் செய்த பேஸ் ஆப் வீடியோக்கள் அதிகம் வைரலாகி இருந்தன. இதனைத் தொடர்ந்து, புஷ்பா படத்தின் ஸ்ரீவள்ளி பாடலில், அல்லு அர்ஜுன் ஆடும் ஒரு ஸ்டெப்பை தானே ஆடும் வீடியோவை வெளியிட்டிருந்தார்.

 

 

 

புஷ்பா ஃபீவர்

இதன் பிறகு, 'சாமி சாமி' பாடலுக்கு தனது மகள்கள், ராஷ்மிகாவின் 'பாப்புலர்' நடன அசைவுகளை ஆடுவதையும் வீடியோவாக வெளியிட்டிருந்தார். இந்நிலையில், மீண்டும் புஷ்பா படத்தை விடாத டேவிட் வார்னர், அதில் அல்லு அர்ஜுன் தோன்றும் டீசர் காட்சி போல ஒன்றை, பேஸ் ஆப் செய்து, தானே அல்லு அர்ஜுனாக இருப்பது போல வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், 'நான் அல்லு அர்ஜூனாக இருந்திருந்தால், நடிப்பு எளிதாக இருந்திருக்கும் போல' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

டேவிட் வார்னர் பதிவிட்ட இந்த வீடியோ, மிகவும் வேகமாக மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து அதிகம் வைரலாகி வருகிறது.

PUSHPA, ALLU ARJUN, DAVID WARNER, VIRAL VIDEO, டேவிட் வார்னர், அல்லு அர்ஜுன், புஷ்பா

மற்ற செய்திகள்