‘காயத்தில் ஆசிட்’.. ‘சிறுநீர் குடிக்க வைத்து கொடுமை’.. 3 மணிநேரம் கட்டிவைத்து தாக்கிய கும்பல்..! துடிதுடிக்க நடந்த சித்ரவதை..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபஞ்சாபில் கூலித்தொழிலாளியை மரத்தில் கட்டிவைத்து அடித்து சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் சங்காலி வாலா கிராமத்தை சேர்ந்தவர் ஜக்மாலே சிங் (37). கூலித்தொழிலாளியான இவரை கடந்த 7ம் தேதி அதே கிராமத்தை சேர்ந்த நான்கு பேர் கொண்ட கும்பல் மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். சுமார் 3 மணிநேரமாக ஜக்மாலேவை அடித்து துன்புறுத்தியுள்ளனர். அப்போது வலிதாங்க முடியாமல் கதறிய அவர், தண்ணீர் கேட்டு கெஞ்சியுள்ளார். ஆனால் அந்த கும்பல் சிறுநீரை குடிக்க கொடுத்து கட்டாயப்படுத்தியுள்ளனர். இதனை அடுத்து ஜக்மாலேவை சாலையில் வீசிவிட்டு அந்த கும்பல் சென்றுள்ளது.
சிகிச்சைக்கு பணமில்லாமல் சம்பவம் நடந்து மூன்று நாட்களாக வீட்டிலேயே இருந்துள்ளார். ஆனால் உடல்நிலை மோசமானதால் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் 13ம் தேதி ஜக்மாலே போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘ரிங்கு என்பவர் அவரது வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு என்னை மரத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கினார். சுமார் 3 மணிநேரத்துக்கும் மேலாக தாக்கினார்கள். ரிங்கு என் கைகளை பிடித்து கொண்டார். அப்போது அவரது தந்தை அமர்ஜீத் சிங் சிறிய உருளையை கொண்டு என்னை கடுமையாக தாக்கினார். நான் ரிங்குவிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டேன். பாத்ரூம் சென்றவர் சிறுநீரை பிடித்து குடிக்க சொல்லி கட்டாயப்படுத்தினார். நான் மறுக்கவே அடித்து குடிக்க வைத்தனர்’ என வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஜக்மாலேவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ரிங்கு, அமர்ஜீத் சிங், லக்கி, பிந்தேர் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜக்மாலே பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் கடுமையாக தாக்கப்பட்டதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். மேலும் முன்பகை காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றிருப்பதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜக்மாலே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் போலீசாரிடம் தெரிவிக்கையில், ‘ஜக்மாலேவை மரத்தில் கட்டிவைத்து தாக்கினர். இரும்பு ராடு மற்றும் கட்டைகளை கொண்டு தாக்கியதில் கால்கள் உடைந்துவிட்டன. அப்போது காயமான பகுதியில் ஸ்க்ரு டிரைவரைக் கொண்டு குத்தி சித்ரவதை செய்தார்கள். அவர் வலியால் கதறும்போது காயம்பட்ட இடத்தில் ஆசிட் ஊற்றினார்கள். குடிக்க தண்ணிர் கேட்டபோது சிறுநீரை குடிக்க சொல்லி கட்டாயப்படுத்தினார்கள்’ என தெரிவித்துள்ளார்.