“129 வருஷத்துக்கு அப்புறம் இப்படி ஒரு உக்கிரம்!”... தீயாய் பரவும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியா129 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் நிகர்சா வெப்ப மண்டல புயல் உருவாகியது. ஜூன் மாதத்தில் மட்டும் கனமழை மற்றும் சூறாவளியால் மகாராஷ்டிரா, குஜராத்தின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன மகாராஷ்டிராவில் மூன்று பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி வங்கக் கடலில் உருவான உம்பன் புயல் மேற்கு வங்கத்தில் கரையை கடந்தபோது, 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு அரபிக்கடலில் உருவான வெப்ப மண்டல புயலான நிகர்சா, கரையை கடக்கும் என தொடர்ந்து அச்சுறுத்தி வந்தது. இந்த நிலையில் மகாராஷ்டிரா , குஜராத் பகுதியில் ஜூன் 3-ஆம் தேதி வெப்பமண்டல புயல் நிகர்சா கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் மும்பையில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராய்காட் மாவட்டம் அருகே, நண்பகலில் வெப்ப மண்டல புயல் நிகர்சா கரையை கடந்தது. அப்போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. கடந்த 1891-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக மும்பையை இந்த வெப்ப மண்டல புயல் தாக்கியதாகவும், 6 மணி நேரத்திற்கு பின் இந்த வெப்பமண்டல புயல் படிப்படியாக வலு குறையும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதனிடையே புயல் கரையை கடந்த போது மும்பையில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக கப்பல்கள் கடுமையாக ஆட்டம் காட்டின. குஜராத் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. அப்போது குடியிருப்பு பகுதியில் தாக்கிய மின்னல் ஒன்று அங்கிருந்த தென்னை மரம் மீது விழுந்ததால் மரம் பற்றி எரிந்தது. ஆனால் நல்வாய்ப்பாக மின்னலால்
#CycloneNisarga: Lightning strikes a tree in Bhavnagar's Palitana town in Gujarat l Video#Gujarat #NisargaCyclone #CycloneNisarg #WeatherForecast #CycloneAlert pic.twitter.com/4pAKcFyz5F
— Priya Jaiswal (@priyajais) June 3, 2020
உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த காட்சிகள் இணையதளத்தில் பரவி வருகின்றன.
மற்ற செய்திகள்