ஆரத்தி எடுத்து.. உணவு டெலிவரி ஊழியரை வரவேற்ற வாடிக்கையாளர்.. Applause அள்ளும் காரணம்!!.. வைரல் வீடியோ!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇன்றைய காலக்கட்டத்தில் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்யும் பழக்கம் என்பது மக்கள் மத்தியில் மிகவும் பரவலாக இருந்து வரும் விஷயமாகும்.
Also Read | மூன்று மாடி வீட்டின் மேற்கூரையில்.. "பெட்சீட் வெச்சு போர்த்தி".. ஈரக் கொலையை நடுங்க வைத்த பின்னணி!!
நேரடியாக உணவகங்களுக்கு சென்று உணவருந்தியோ அல்லது வாங்கியோ வருவதை விட, ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் மூலம், வீட்டில் இருந்து கொண்டே ஆர்டர் செய்யும் போது நமக்கு தேவையான உணவை விலைக்கேற்ப நிதானமாக பார்த்துக் கூட ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.
இதன் காரணமாக, நகர பகுதிகளில் ஆன்லைன் டெலிவரி செய்யும் ஊழியர்களை பெரும்பாலான சாலைகளில் நாம் பார்க்க முடியும்.
இந்நிலையில், ஆன்லைன் மூலம் நபர் ஒருவர் உணவு ஆர்டர் செய்திருந்த நிலையில், ஒரு மணி நேரம் தாமதமாக வந்த டெலிவரி ஊழியருக்கு அவர் செய்த விஷயம் தொடர்பான வீடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
டெல்லி பகுதியை சேர்ந்த சஞ்சீவ் என்ற நபர், சொமாட்டோ உணவு டெலிவரி நிறுவனம் மூலம் உணவு ஆர்டர் செய்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர் ஆர்டர் செய்திருந்த உணவை கொண்டு வந்த டெலிவரி ஊழியர் ஒரு மணி நேரம் தாமதமாக வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
பொதுவாக, உணவு டெலிவரி ஊழியர்கள் தாமதமாக உணவு கொண்டு வரும் வேளையில், வாடிக்கையாளர்கள் பலரும் அதனை அதிருப்தியுடன் தான் எதிர்கொள்வார்கள். மறுபக்கம், டெலிவரி ஊழியர் டிராபிக்கில் அவதிப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமாக இருக்குமா என்பது பற்றி ஆலோசிக்க மாட்டார்கள்.
ஆனால், சஞ்சீவ் என்ற இந்த நபர், ஒரு மணி நேரம் தாமதமாக வந்த டெலிவரி ஊழியருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்று, பாட்டு பாடியபடி நெற்றியில் திலகமும் இடுகிறார். இவை அனைத்தையும் அந்த ஊழியர் சிரித்த முகத்துடனேயே ஹெல்மெட்டை விலக்கி ஏற்றுக் கொள்ளவும் செய்கிறார். மேலும், இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சஞ்சய் பகிர்ந்துள்ளார்.
மேலும் தனது கேப்ஷனில், "டெல்லியின் கடும் டிராபிக்கிற்கு மத்தியிலும் உணவு டெலிவரி செய்யப்பட்டது. நன்றி Zomato" எனவும் குறிப்பிட்டுள்ளார். ஒரு சிலர் இந்த வீடியோவை பார்த்து அவர் டெலிவரி ஊழியர் தாமதமாக வந்ததை கிண்டல் செய்வதாகவும் குறிப்பிடுகின்றனர். ஆனால், ஒரு வழியாக பல்வேறு தடங்கல்கள் கடந்து உணவைக் கொண்டு சேர்த்த ஊழியரை கடிந்து கொள்வதற்கு பதில் இப்படி செய்வது சிறப்பான அணுகுமுறை என்றும் இன்னொரு பக்கம் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.
Also Read | மண்டை மேல இருக்குற கொண்டையை மறந்த திருடன்.. "திருட போன எடத்துல இவ்ளோ ஞாபக மறதியா?".. சுவாரஸ்யம்!!
மற்ற செய்திகள்