'நொடிப்பொழுதில் சிறுமிக்கு நிகழ்ந்த விபரீதம்'... ‘சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஜம்மு-காஷ்மீர்  ஆற்றில் மூழ்கிய சிறுமியை, காப்பாற்றிய சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

'நொடிப்பொழுதில் சிறுமிக்கு நிகழ்ந்த விபரீதம்'... ‘சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்’!

வடகிழக்கு மற்றும் வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஆற்றில் துணி துவைப்பதற்காக நாகினா என்ற 13 வயது சிறுமி சென்றார். கரையோரத்தில் இருந்த அவர், திடீரென ஸ்லிப் ஆனதில் ஆற்றுநீர் இழுத்துச் சென்றது. இதனால் திகைத்த அந்த சிறுமி, காப்பாத்துமாறு உடனடியாக கத்தி கூச்சலிட்டார்.

அந்நேரத்தில் ஆற்றின் கரையில் நின்று கொண்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் 5 பேர், சிறுமியின் கதறலைக் கேட்டு ஆற்றில் குதித்தனர். பின்னர் சிறுமியை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த வீடியோ தற்போது வேகமாக பகிரப்படுவதுடன், சிஆர்எஃப் வீரர்களுக்கு பாராட்டும் குவிந்து வருகிறது.

CRPF, JAMMUKASHMIR, BARAMULLA, VIRALVIDEO