கோவிஷீல்ட் 'வாக்சின்' போட்டவங்களுக்கு... ஒண்ணு இல்ல மொத்தம் 'ரெண்டு' குட் நியூஸ்...! - இராணுவ மருத்துவக் குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ள தகவல்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்திய நிலையில், கொரோனா வைரஸிற்கு எதிராக இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் அதிகளவில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
தற்போது கோவிஷீல்ட் தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 93 % பாதுகாப்பையும், உயிரிழப்பிலிருந்து 98 % பாதுகாப்பையும் அளிப்பதாக இராணுவ மருத்துவக் குழு மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
இது குறித்து, என்.ஐ.டி.ஐ ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் அவர்கள் 15 லட்சம் மருத்துவர்கள் மற்றும் முன்னணி தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வின் மூலமாக இந்த முடிவு கண்டறியப்பட்டுள்ளதாகவும், இந்த கோவிஷீல்ட் தடுப்பூசி டெல்டா வகை கொரோனாவில் இருந்து அதிகம் பாதுகாப்பை கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆகவே மக்கள் மிகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டிய நேரம் எனவும், தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் காலம் தாழ்த்தாமல் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், சமீபத்தில் நடந்து முடிந்த மற்றொரு ஆய்வில் "கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஆயுள் முழுவதும் கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு திறன் வேலை செய்கிறது" என்று வெளியானது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்