'எவ்ளோ எச்சரிச்சோம்?'...'அடுத்த 15 நாட்களுக்கு இந்தியாவில் இருந்து செல்லும் பிரபல விமான சேவைக்கு தடை போட்ட துபாய்'!.. பரபரப்பு பின்னணி!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் இருந்து துபாய்க்கு செல்பவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பின்னரே அனுமதிக்கப்படுவர் என துபாய் சிவில் ஏவியேஷன் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கடந்த 15 ஆம் தேதியில் தொடங்கி விமான சேவை. இதில் இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் சென்ற பயணிகளில் இருவருக்கு துபாயில் இறங்கியதும் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதனால் இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்துக்கு துபாய் சிவில் ஏவியேஷன் தடை விதித்துள்ளது. அத்துடன் அந்த 2 இந்திய கொரோனா நோயாளிகளுக்கு உண்டான மருத்துவ செலவுகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தான் செலவை ஏற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் இதுகுறித்த ஒரு கடிதத்தை எழுதியுள்ள துபாய் சிவில் ஏவியேஷன் ஆணையம், ஏற்கனவே பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை மீறப்பட்டுள்ளதால், அடுத்த15 நாட்களுக்கு அதாவது, வரும் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.
மற்ற செய்திகள்