‘எந்த குடும்பத்துக்கும் இப்டியொரு சோதனை வரக்கூடாது’.. கதறியழுத உறவினர்கள்.. நெஞ்சை ரணமாக்கிய சோகம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை மாற்றி வேறொரு குடும்பத்தினரிடம் கொடுத்து அடக்கம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘எந்த குடும்பத்துக்கும் இப்டியொரு சோதனை வரக்கூடாது’.. கதறியழுத உறவினர்கள்.. நெஞ்சை ரணமாக்கிய சோகம்..!

தெலுங்கானா மாநிலம் ஹைதாராபாத் நகரில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி 35 வயதான நபர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே வந்த அவரது குடும்பத்தினர் பிணவறைக்கு சென்று அவரின் சடலத்தை தேடினர். ஆனால் அங்கு அவரது சடலம் இல்லை.

இதுதொடர்பாக மருத்துவமனை அதிகாரிகளிடம் உறவினர்கள் முறையிட்டுள்ளனர். ஆனால் அதிகாரிகள் அதற்கு சரியான விளக்கம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதன்பின்னர் அந்த நபரின் சடலம் வேறொரு குடும்பத்தினரிடம் கொடுத்ததும், அதனை அவர்கள் அடக்கம் செய்துவிட்டதும் தெரியவந்துள்ளது.

இதைக் கேட்ட உயிரிழந்தவரின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளனர். இந்த சம்பவ போன்றே கடந்த வாரமும் இதே மருத்துவமனையில் நிகழ்ந்தது. மயானம் வரை சென்றபின் சடலம் மாறியது தெரியவந்து, பின்னர் அந்த சடலம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கை கூட செய்ய முடியாமல் உறவினர்கள் கதறியழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்