கொரோனாவால் உயிரிழப்பா?.. இழப்பீடு வழங்குவது தொடர்பாக... காரசார விவாதம்!.. கட் அண்ட் ரைட்டாக உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனாவுக்கு பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிதி இழப்பீடு வழங்குவ்து தொடர்பாக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனாவால் உயிரிழப்பா?.. இழப்பீடு வழங்குவது தொடர்பாக... காரசார விவாதம்!.. கட் அண்ட் ரைட்டாக உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்!

கொரோனா அல்லது கொரோனாவுக்கு பிந்தைய பிரச்சனைகளால் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்ற வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு, கொரோனாவால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிதி நிவாரணம் வழங்குவது கட்டாயம் என தெரிவித்தது.

விசாரணையின் போது நிவாரணம் தொடர்பான விதிகளை வகுப்பது, தங்களது அதிகாரத்திற்கு உடபட்டது அல்ல என்ற தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பதிலை ஏற்காத நீதிபதிகள், பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, கொரோனாவால் பலியானவர்களின் குடும்பத்திற்கு கருணைத் தொகை உள்ளிட்ட குறைந்தபட்ச நிவாரணத்தை வழங்குவது, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்  பொறுப்பு என கூறினர்.

மேலும், நிவாரணம் என்பது சட்டப்பூர்வமாக வழங்கப்பட வேண்டிய ஒன்று என்றும், அது விருப்பு வெறுப்பை பொறுத்தது அல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். எவ்வளவு நிவாரணம் வழங்கலாம், அதற்கான சட்டதிட்டங்கள் என்ன என்பதை 6 வாரங்களுக்குள் முடிவு செய்யுமாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு அவர்கள் உத்தரவிட்டனர்.

அத்துடன், கொரோனாவுக்கு பலியானவர்களின் இறப்புச்சான்றிதழில் இறப்புக்கான காரணம், நாள் ஆகியவற்றை கட்டாயம் குறிப்பிடுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அந்த விவரங்கள் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால் அவற்றை ஆய்வு செய்து மாற்றுவதற்கான வசதியையும் ஏற்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

மற்ற செய்திகள்