யாரெல்லாம் 'கொரோனா' பரிசோதனை... செய்துகொள்ள வேண்டும்?... வெளியான 'புதிய' தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6000 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் ஊரடங்கை மேற்கொண்டு 2 வாரங்களுக்கு நீட்டிக்கலாமா? என்று மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதுகுறித்து நாளை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியபின் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாரெல்லாம் 'கொரோனா' பரிசோதனை... செய்துகொள்ள வேண்டும்?... வெளியான 'புதிய' தகவல்!

இந்த நிலையில் யாரெல்லாம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது. அதுகுறித்த விவரங்களை கீழே பார்க்கலாம்:-

1. கொரோனா உறுதிசெய்யப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த அறிகுறிகள் அற்ற நபரும், அவருடனான தொடர்புக்கு பின்பு 5 நாள் முதல் 14-வது நாளுக்குள் ஒருமுறையேனும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

2. கடைசி 14 நாட்களில் வெளிநாட்டு பயணத்தில் இருந்த அறிகுறிகள் உடைய நபர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

3.  தீவிர சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகள்

4. அறிகுறிகளைக் கொண்ட சுகாதாரப் பணியாளர்கள்.

5. கொரோனா பாசிட்டிவ்வாக உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்து, அறிகுறிகளுடன் இருப்பவர்கள்.

6. அதிக அளவிலாக கூட்டமாக வாழ்பவர்கள், இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், மையங்களில் அறிகுறிகள் உடைய அனைவரும், அதாவது 7 நாட்கள் தொடர்ச்சியான அறிகுறிகள் எதுவாயினும் அவர்களும் ஆர்.டி பிசிஆர் முறையில் சோதிக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் கொரோனா இன்னும் சமூக பரவல் என்னும் 3-வது கட்டத்திற்கு செல்லவில்லை என்று இந்திய மருத்துவ கவுன்சில் மூத்த விஞ்ஞானி ராமன் கங்காகேத்கர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.