'எனக்கு வேற வழி தெரியல'... 'கட்டிலோடு மரத்தின் உச்சிக்கு போன இளைஞர்'... 'காரணம் என்ன'?... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

11 நாட்களாக இளைஞர் ஒருவர் மரத்தின் உச்சியில் வசித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

'எனக்கு வேற வழி தெரியல'... 'கட்டிலோடு மரத்தின் உச்சிக்கு போன இளைஞர்'... 'காரணம் என்ன'?... வைரலாகும் வீடியோ!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை படுதீவிரமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று லேசான அறிகுறி இருப்பவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தற்போது இடவசதி இல்லாததால் வீடுகளில் தங்கிக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் வசதியில்லாதவர்கள் வேறு வழியின்றி ஆஸ்பத்திரி வளாகத்தில் தரையில் படுத்தபடியும் சிகிச்சை பெறும் நிலை பல இடங்களில் உள்ளது.

Covid 19 : Telangana young man spends 11 days on a tree

இந்தநிலையில் கொரோனா உறுதியாகி வீட்டில் தனிமைப்படுத்த வசதியில்லாத வாலிபர் ஒருவர் மரத்தில் கட்டிலைக் கட்டி தனிமைப்படுத்திக் கொண்ட சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் கொத்தன்கொண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா (வயது 25), இவரது வீட்டில் பெற்றோர் சகோதரர் என மொத்தம் 4 பேர் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவப்பரிசோதனை செய்த நிலையில் அதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதே நேரத்தில் மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததை அறிந்த அவர் அங்குச் செல்லாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டார். ஆனால் அவரது வீட்டில் ஒரே ஒரு அறை மட்டுமே உள்ளதால் வீட்டின் அருகில் உள்ள ஒரு மரத்தின் மேல் கட்டிலைக் கட்டி தங்கினார்.

Covid 19 : Telangana young man spends 11 days on a tree

சிவா கடந்த 11 நாட்களாக மரத்திலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். அவருக்கு தேவையான உணவு, மருந்து மாத்திரைகள் அனைத்தும் கயிறு மூலம் அவரின் குடும்பத்தினர் வழங்கி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலர் அவருக்கு உதவ முன் வந்தனர். ஆனால் சிவா உதவிகளை மறுத்து விட்டார். தொடர்ந்து அவர் 3-வது நாளாக மரத்தில் தங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்