'இது' இல்லேன்னா இனிமே 'பெட்ரோல்' தர மாட்டோம்... அதிரடி 'முடிவெடுத்த' மாநிலம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாசீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனாவால் அதிக உயிரிழப்பை இத்தாலி நாடு சந்தித்தது. இத்தாலி போல தற்போது அமெரிக்காவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவருகிறது.
உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவுக்கு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் நாளுக்குநாள் இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை தடுக்க, இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு மே மாதம் 3-ம் தேதிவரை அமலில் இருக்கும்.
இந்நிலையில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதன் ஒரு பகுதியாக, மாஸ்க் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு இனி பெட்ரோல் கிடையாது என மேற்கு வங்காளத்தில் உள்ள பெட்ரோலிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.