'இந்தியாவில் செப்டம்பரில் இந்த மேஜிக் நடக்குமா?'... 'கணித முறை மாதிரி மூலம் ஆய்வு'... தித்திப்பான செய்தியை சொன்ன நிபுணர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனாவுக்கு எப்போது முடிவுரை எழுதப்படும் என்பது குறித்து, சுகாதார அமைச்சகத்தின் இரு பொதுச் சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளது தற்போது சற்று நிம்மதியை அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தற்போது உச்சநிலையில் உள்ளது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று செப்டம்பர் மாதத்தின் மத்தியில் முடிவுக்கு வரலாம் எனச் சுகாதார அமைச்சகத்தின் இரு பொதுச் சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கணித முறை மாதிரி ஆய்வின் படி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளார்கள்.
இந்த ஆய்வின்படி பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, கொரோனா தொற்றால் இறந்தவர்கள் மற்றும் குணமடைந்த எண்ணிக்கையுடன் சரிசமமாகும்போது, அதன் குணகம் (Coefficient) 100 சதவிகித வரம்பைத் தொட்டு, பின்னர் தொற்றுப்பரவல் மறையும் என்று இந்த ஆய்வு தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்கள்.
இந்த ஆய்வானது எபிடெமியாலஜி இண்டெர்நேஷனல் என்னும் ஆய்விதழில் மருத்துவர் அனில் குமார் மற்றும் ரூபாலி ராய் ஆகிய இரு பொதுச் சுகாதார மருத்துவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனவனால் குணமடைந்தோ அல்லது இறந்து போகும்வரை பாதிப்படைந்தோர் மற்றவர்களுக்குத் தொற்றைப் பரப்புகிறார்கள்.
பெய்லி கணிதமாதிரி முறையில் செய்யப்பட்ட இந்த ஆய்வில், தொற்று மற்றும் குணமடைதல் என்னும் இரண்டு கூறுகளும் உட்படுத்தி, பெருந்தொற்றின் முழு அளவையும், பரவலான தன்மையையும் கணக்கில் எடுத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு கொரோனா தொடர்பான நடவடிக்கைகளுக்கு இந்த ஆய்வு உதவியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
தனிமைப்படுத்துதல், பெருந்தொற்று மேலாண்மை மற்றும் தொற்றுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் சரியாக மேற்கொண்டால் மட்டுமே, கொரோனா தொற்றைக் கட்டுக்குள் வைக்க முடியும் என இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்த ஆய்வானது மிகக் குறிப்பிட்ட கால இடைவெளியில் கிடைத்த தரவுகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்