கடந்த '24 மணி' நேரத்துல மட்டும்... நாட்டுக்கு 'நல்ல' செய்தி சொன்ன 'சுகாதாரத்துறை' அமைச்சகம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,099 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 5 நாடுகளுக்குள் ஒன்றாக இந்தியா இருந்தாலும், கொரோனா இறப்பு எண்ணிக்கை நமது நாட்டில் குறைவாகவே உள்ளது. மேலும் கொரோனா தொற்றில் இருந்து மீள்பவர்களின் எண்ணிக்கை விகிதமும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,099 பேர் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் இதன் மூலம் நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 59.07% (3,34,821) ஆக அதிகரித்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS