ஆகஸ்ட் 3-ம் தேதி 'பள்ளிகள்' மீண்டும் திறக்கப்படும்... அதிரடியாக 'அறிவித்த' மாநிலம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என, ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்து இருக்கிறார்.
கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் காலவரையின்றி விடுமுறை அறிவிக்கப்பட்டது. நாளுக்குநாள் கொரோனா அதிகரித்து வருவதால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்துவதே பெரும்பாடாக இருக்கிறது.
இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்து இருக்கிறார். பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக இன்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி ஆந்திர மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தார்.
மேலும், ஆந்திராவில் வணிக வளாகங்கள், திரையரங்குகள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றைத் திறப்பதற்கான தடை தொடரும் என்றும் கொரோனா தொற்று குறைவாக உள்ள பகுதிகளில், கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.