'வீட்டை விட்டு ஓடிப்போறவங்களுக்கு...' 'இங்கு திருமணம் செய்து வைக்கப்படும்...' அசர வைக்கும் பேக்கேஜ்கள், சலுகைகள்...' - குவியும் இளசுகள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹரியானா மாநிலத்தில் இயங்கும் ஒரு கடையில் காதலிக்கும் ஜோடிகளுக்கு உதவி செய்யும் வகையில் ஒரு சிறப்பு அறிவிப்பு ஒன்றை கடையின் வெளியே தொங்கவிடப்பட்டுள்ளது.
இன்றைய நவீன உலகிலும் இந்தியாவில் மக்கள் சாதி, மதம் காரணமாக தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். என்னதான் அக்கம்பக்கம் வீட்டில் பேசி சிரித்து கொண்டாலும் பிற மதம் மற்றும் ஜாதியில் ஆண் பெண் காதல் செய்தாலும் இன்றளவும் பெற்றோர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவது மோசமான உண்மை.
இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் பெற்றோர் சம்மதிக்காததால் வீட்டை விட்டு வெளியே வரும் காதல் ஜோடிகளுக்கு உதவி செய்வதற்காக ஒரு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் பஞ்குலா பகுதியில் அமைந்துள்ள ஒரு கடைக்கு சென்று காதல் ஜோடிகள் திருமணம் செய்ய வேண்டும் என கூறினால், அவர்களுக்கான திருமண ஆடை, தாலி, போட்டோகிராப், திருமணப்பதிவு, வழக்கறிஞர் செலவு என அனைத்தும் செய்து தரப்படுகிறது.
இந்த திருமண செலவு ரூ.5,100 முதல் ரூ.16,000 வரை ஜோடிகளின் விருப்பத்திற்கு ஏற்ப பேக்கேஜ்கள் உள்ளதாம்.
அதுமட்டுமில்லாமல் நாம் திருமணம் செய்யவேண்டும் என சொன்னால் இவை அனைத்தும் 2 நாளில் ஏற்பாடு செய்யப்படுவதாகவும் கூறுகின்றனர். இதுவரை இந்த கடை மூலம் மாதத்திற்கு 70-80 திருமணங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அதோடு, இந்த கடைக்காரர்கள் திருமணம் செய்பவர்கள் வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்தால், நீதிமன்றத்தில் ஆஜராகி இவர்களுக்கு பாதுகாப்பு பெற்று தருவது வரை செய்வதும் உண்டு.
மற்ற செய்திகள்