‘முகூர்த்த நேரத்திற்கு முன்னதாக கிடைத்த தகவல்’... ‘ஆனாலும் உறுதியாக இருந்த மணமக்கள் குடும்பத்தினர்’... ‘கடைசியில் நடந்த திருப்பம்’...!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மணமகளுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா சிகிச்சை மையத்திலேயே, இளம் ஜோடி ஒன்று திருமணம் செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

‘முகூர்த்த நேரத்திற்கு முன்னதாக கிடைத்த தகவல்’... ‘ஆனாலும் உறுதியாக இருந்த மணமக்கள் குடும்பத்தினர்’... ‘கடைசியில் நடந்த திருப்பம்’...!!!

ராஜஸ்தான் மாநிலம் ஷாபாத் நகரில் இளம் ஜோடி ஒன்று திங்கள்கிழமை மாலை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து அதற்கான வேலைகளில் ஆயத்தாகிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், திருமணத்திற்கு 2 நாட்கள் முன்னதாக நஹர்கார்ஹ் பகுதியைச் சேர்ந்த மணப்பெண்ணின் அத்தை, மாமாவிற்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த மணப்பெண் உள்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் மணப்பெண் மற்றும் அவரது தாயாருக்கு முகூர்த்த நேரத்திற்கு முன்னதாக கொரோனா தொற்று உறுதியானது. ஆனால் இதனை அறியாத மணப்பெண் குடும்பத்தினர், திருமணம் நடைபெறும் ஷாபாத் பகுதிக்கு சென்றனர். கொரோனா தொற்று உறுதியானதை அறிந்த சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ ஊழியர்கள் மணப்பெண் மற்றும் அவரது தாயாரை அழைத்து வர, அவர்களது வீட்டிற்கு சென்றனர்.

ஆனால், அதற்கு முன்னதாகவே மணப்பெண் குடும்பத்தினர் திருமணம் நடைபெறும் இடத்திற்கு சென்றுவிட்டதை அறிந்ததும், திருமணம் நடைபெறும் ஷாபாத் பகுதிக்கு சென்றனர். கொரோனா தொற்று உறுதியான தகவலை, மணமக்களிடம் சொல்லி கொரோனா சிகிச்சை மையத்திற்கு, மணமகள் மற்றும் அவரது தாயாரை அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறினர். மேலும் கொரோனா சிகிச்சை முடிந்தப்பின்னரே திருமணம் நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

Couple ties knot in PPE kits after bride tests Covid-19 positive

இதனால் அதிர்ச்சியைடந்த மணமக்களின் குடும்பத்தினர்,  ஏற்கனவே திருமண தேதியை உறுதிப்படுத்திவிட்டதால், இனிமேல் தங்களது வழக்கப்படி திருமண தேதியை மாற்றமுடியாது என்று சுகாதாரத்துறை ஊழியர்களிடம் கெஞ்சி வற்புறுத்த ஆரம்பித்தனர். இதனையடுத்து மனமிறங்கிய சுகாதாரத்துறை ஊழியர்கள், திருமணம் நடைபெறும் இடம் இல்லாமல், கொரோனா சிகிச்சை மையத்திலேயே, உறவினர்கள் யாருமின்றி திருமணம் நடத்த அனுமதி தந்தனர்.

இதனால் வேறுவழியின்றி, கொரோனா சிகிச்சை மையத்தின் காலி இடத்தில், தற்காலிக திருமண பந்தல் இட்டு, மணமகன், மணமகள், மணமகளின் தந்தை, திருமணம் நடத்தி வைக்கும் குருக்கள் மட்டும் தனிமனித கவச உடையணிந்து பாதுகாப்புடன் திருமணத்தை நடத்தினர். திருமணத்திற்குப் பின்னர், மணமகள் மற்றும் அவரது தாயார் கொரோனா சிகிச்சை மையத்தின் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர்.

மணமகளின் தந்தைக்கு கொரோனா நெகடிவ் என்று வந்ததால் அவர் வீட்டுக்கு செல்லலாம் என்று மருத்துவ ஊழியர்கள் கூறினர். திருமணம் நடைபெறும் இடம் திடீர் திருப்பமாக அமைந்தது என்றாலும், திருமணம் நடைபெற்றதால் உறவினர்கள் நிம்மதி அடைந்தனர்.இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

மற்ற செய்திகள்