கல்யாணம் முடிஞ்சு தண்ணி லாரியில் ஊர்வலம்‌ போன புதுமண தம்பதி.. "அந்த ஒரு விஷயம் நடந்தா தான் Honey Moon-ஆம்.."

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இன்றைய கால கட்டத்தில், இணையம் மற்றும் சமூக வலைத்தளம் என எதில் நாம் சுற்றித் திரிந்தாலும் திருமணத்தை சுற்றி நடைபெறும் வித்தியாசமான அல்லது வினோதமான நிகழ்வுகள் என ஏராளாமான நிகழ்வுகளை வீடியோக்களாக அல்லது செய்திகளாக காண நேரிடலாம்.

கல்யாணம் முடிஞ்சு தண்ணி லாரியில் ஊர்வலம்‌ போன புதுமண தம்பதி.. "அந்த ஒரு விஷயம் நடந்தா தான் Honey Moon-ஆம்.."

வித்தியாசமான போட்டோஷூட், திருமண மேடையில் அசத்தலான ஆட்டம் பாட்டம், நண்பர்கள் கொடுக்கும் பரிசு, நெகிழ வைக்கும் சர்ப்ரைஸ் என திருமணத்தை சுற்றி புதிது புதிதாக தற்போது நடக்கும் விஷயங்கள் ஏராளம்.

அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த புதுமண ஜோடி ஒன்று, தங்களின் திருமண ஊர்வலத்தின் போது செய்த விஷயம் ஒன்று, இணையத்தில் ஹிட்டடித்து வருகிறது.

இப்படியும் ஊர்வலம் போலாமா?

மகாராஷ்டிர மாநிலம், கோல்ஹாபூர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் விக்ரம் கொலேகர். இவருக்கும், அபர்ணா என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. பொதுவாக, திருமணம் முடிந்த பின்னர் மணமக்கள் இருவரும், அலங்கரிக்கப்பட்ட காரில் ஊர்வலமாகி வீட்டிற்கு திரும்பி செல்வார்கள்.

ஆனால், விக்ரம் - அபர்ணா ஜோடி காருக்கு பதிலாக தேர்ந்தெடுத்த வாகனம் தான், பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. தங்களின் பகுதியில் தண்ணீர் பிரச்சனை அதிகம் இருப்பதால், இதனை எடுத்துரைக்கும் விதமாக விக்ரம் மற்றும் அபர்ணா ஆகியோர், தண்ணீர் டேங்கர் மீது அமர்ந்து ஊர்வலமாக வந்துள்ளனர். இவர்கள் முன்னாள் உறவினர்கள் நடனமாடிய படி, வீதியில் செல்ல ஒய்யாரமாக அமர்ந்து படி, தண்ணீர் டேங்கர் மீது ஜோடி வலம் வருகிறது.

ஊரில் நிலவும் தண்ணீர் பிரச்சனை

அதே போல, இந்த டேங்கர் மீது ஒரு பேனரும் இடம்பெற்றுள்ளது. அதில், தங்கள் பகுதியிலுள்ள தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைப்பது வரை, அவர்கள் ஹனிமூனுக்கும் போவதில்லை என விக்ரம் மற்றும் அபர்ணா முடிவு செய்துள்ளனர். தங்களின் பகுதியில், நான்கு நாளுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வருவதாகவும், அப்பகுதியை சேர்ந்த பலரும் இதன் காரணமாக கடும் பாதிப்புக்கு ஆளாகி வருவதாகவும் விக்ரம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த பிரச்சனையை வெளியே தெரியப்படுத்தும் முயற்சியில் தான் தண்ணீர் டேங்கர் மீது அமர்ந்து ஊர்வலமாக அவர்கள் வந்துள்ளனர். அதே போல, தனது மகள் தண்ணீர் பிரச்சனை இல்லாமல் இருக்க, தனது மாமனாரிடம் ஒரு டேங்கர் தண்ணீரையும் விக்ரம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதற்கு அபர்ணாவின் தந்தையும் ஒப்புக் கொண்டு, ஒரு டேங்கர் தண்ணீரையும் அளித்துள்ளார்.

மணமக்கள் தண்ணீர் டேங்கர் மீது அமர்ந்து வரும் புகைப்படங்கள் தான், இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

WEDDING COUPLE, WATER TANKER, BARAAT

மற்ற செய்திகள்