‘கலப்புத்திருமணம்’!.. ‘4 வருஷம் தலைமறைவு’! சொந்த ஊருக்கு வந்த காதல் தம்பதியை கல்லால் அடித்துக் கொன்ற ஊர்மக்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகலப்புத்திருமணம் செய்த காதல் தம்பதியை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் கடக் மாவட்டத்தில் உள்ள லக்காலாகட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் மாதர். இவர் அதே ஊரை சேர்ந்த கங்கம்மா என்ற பெண்ணை காதலித்துள்ளார். ஆனால் ரமேஷ் மாதர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் வீட்டில் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துள்ளனர்.
இதனை அடுத்து நான்கு வருடங்களாக கர்நாடகா மாநிலத்திலேயே இருவரும் தலைமறைவாக கூலி வேலை செய்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 6ம் தேதி இருவரும் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அப்போது இவர்களை பார்த்த ஊர்மக்கள் கல்லால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் இருவரும் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.