மனைவி வீட்டுல இல்ல..தோட்டத்துல கேட்ட வினோத சத்தம்.. கணவன் செஞ்ச பகீர் காரியத்தால் பதறிப்போன போலீஸ்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேச மாநிலத்தில் 63 வயதான நபர் மர்மமான முறையில் மரணமடைந்த வழக்கில் தம்பதி ஒன்று காவல்துறையால் கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Also Read | "இந்த Photo-க்குள்ள டைவ் அடிக்க தோனுது".. ஆனந்த் மஹிந்திராவின் வைரல் பதிவு..!
சோகம்
மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள மௌஹாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் மிஸ்ரா. 63 வயதான இவர் சில தினங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் மரணமடைத்தார். ஆரம்பத்தில் மாரடைப்பு காரணமாக மிஸ்ரா மரணமடைந்திருக்கலாம் என சந்தேகப்பட்ட நிலையில், அதே பகுதியை சேர்ந்த கணவன் மனைவியால் மிஸ்ரா கொலை செய்யப்பட்டிருப்பது போலீசாரால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தோட்டத்தில் கேட்ட சத்தம்
மௌஹாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஷியாம்லால். இவர் கடந்த வாரம் இரவு வேலைமுடித்து தாமதமாக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் மனைவி இல்லாததால் குழப்பமடைந்த அவர், அக்கம் பக்கத்தில் மனைவியை தேடத்துவங்கியுள்ளார். இந்நிலையில், வீட்டின் அருகே இருந்த தோட்டத்தில் பேச்சு சத்தம் கேட்கவே, சந்தேகமடைந்த லால் தோட்டத்திற்குள் சென்றிருக்கிறார்.
அப்போது ஷியாம்லாலின் மனைவியும், மிஸ்ராவும் அங்கே இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து லால், மிஸ்ராவை தாக்கியதாக தெரிகிறது. அப்போது, லாலின் மனைவியும் மிஸ்ராவை தாக்கியதாகவும் அதனால் மயக்கமடைந்த மிஸ்ராவை இருவரும் சற்று தூரத்தில் வீசிச்சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
திருப்புமுனை
மிஸ்ரா மாரடைப்பு காரணமாக மரணமடைந்திருக்கலாம் என நம்பப்பட்டுவந்த நிலையில், மிஸ்ராவின் போனில் ஷியாம் லால் மனைவியின் போன் நம்பர் இருப்பதையறிந்த காவல்துறையினர் விசாரணையை துவங்கினர். அப்போது தான், மிஸ்ராவுக்கும் அந்தப் பெண்ணிற்கும் பழக்கம் இருந்ததை கண்டுபிடித்திருக்கிறது போலீஸ்.
இதனையைடுத்து, ஷியாம்லால் மற்றும் அவரது மனைவியை விசாரித்ததில் இருவரும் தாங்கள் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்துப் பேசிய உதவி காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் வர்மா," கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இந்த கொலையை செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும், இறந்தவரிடமிருந்து தங்க செயின் மற்றும் பணத்தை இந்த தம்பதி திருடியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளோம். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
மத்தியப் பிரதேசத்தில் 63 வயதான நபர் ஒரு தம்பதியால் கொலை செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்திருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்