‘ஊரே வெறிச்சோடி இருக்கு’.. ‘பாவம் சாப்பாட்டுக்கு இதுங்க எங்க போகும்’.. நெகிழ வைத்த சகோதரிகள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் உணவில்லாமல் தவிக்கும் தெரு நாய்களுக்கு நாக்பூரை சேர்ந்த சகோதரிகள் உணவு வழங்கும் சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

‘ஊரே வெறிச்சோடி இருக்கு’.. ‘பாவம் சாப்பாட்டுக்கு இதுங்க எங்க போகும்’.. நெகிழ வைத்த சகோதரிகள்..!

கொரோனா வைரஸ் தொற்று பரவால் இருக்க சமூக இடைவெளி மற்றும் தனிமைப்படுத்தலை கடைபிடிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராததால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கு சகோதரிகள் உணவு வழங்கி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த காஜல், திஷா என்ற இரு சகோதரிகள் வீட்டில் சமைத்த உணவு மற்றும் பிஸ்கட் போன்றவற்றை தெருவில் சுற்றி திரியும் நாய்களுக்கு வழங்குகின்றனர்.

இதுகுறித்து தெரிவித்த சகோதரிகளில் ஒருவர், ‘ஊரடங்கு உத்தரவால் உணவங்கள் மூடப்பட்டுள்ளன. ஒருசில மக்கள் மட்டுமே வீட்டைவிட்டு வெளியே வருகின்றனர். இதனால் தெருவில் இருக்கும் நாய்களுக்கு உணவு கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் எங்களால் முடிந்த அளவிற்கு தெரு நாய்களுக்கு உணவு வழங்கி வருகிறோம்’ என தெரிவித்துள்ளார். சகோதரிகளின் இந்த மனிதாபிமான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.