‘கொரோனா அச்சம்’!.. ‘இனி வீட்டுல இருந்தே எடுத்துட்டு வந்துருங்க’.. இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் அச்சம் காரணமாக குளிர்சாதன ரயில் பெட்டிகளில் பயணிகளுக்கு கம்பளி, போர்வைகள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடுமுழுவதும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ரயில்களில் உள்ள ஏசி பெட்டிகளின் திரைச்சீலைகள் அகற்றப்பட உள்ளன. மேலும் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், தங்களது வீடுகளில் இருந்து வரும்போதே கம்பளி, போர்வைகள் எடுத்து வருமாறு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல் படுக்கை விரிப்பு, தலையணை போன்ற பொருட்கள் தேவை என கேட்கும் பயணிகளுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என ரயில்வே ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயிலில் மக்கள் கை வைக்கும் ஸ்விட்ச், பாட்டில் வைக்கும் இடம் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kindly note that it has been decided to withdraw curtains & blankets from AC coaches of trains as they are not washed every trip, for prevention of #coronavirus. Passengers may please bring their own blankets if need be. Inconvenience is regretted. @RailMinIndia @PiyushGoyalOffc
— Western Railway (@WesternRly) March 14, 2020
Coaches of long distance trains being cleaned & disinfected with disinfectant chemical at Bhavnagar, Veraval & Porbander in Bhavnagar Division. #CoronaVirusUpdates pic.twitter.com/dzl536DcPZ
— Western Railway (@WesternRly) March 14, 2020