'கொரோனா பாதிப்பு 31 ஆக உயர்வு'... '6 மாநிலங்களுக்கு'... 'மத்திய அரசு எச்சரிக்கை'!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 31 ஆக உயர்ந்துள்ள நிலையில், 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனா உகான் நகரில் உருவான கொரோனா வைரஸாஸ் இதுவரை 98,424 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்குநாள் பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் டெல்லி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் 31 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாடு, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களும் சிலரைத் தனிமைப்படுத்தியுள்ளன.
இதற்கிடையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பயத்தை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கு வங்கம், பீகார், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், சிக்கிம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 6 மாநிலங்கள் விழிப்புடன் இருக்குமாறு மத்திய அரசு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் தொற்றுநோய் தொடர்பாக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகள் குறித்து ஆலோசனைகளை பட்டியலிட்டுள்ளது.
பல அமைச்சகங்களுடன் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதார அமைச்சகம், மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநிலங்களையும் அறிவுறுத்தி உள்ளது. அவசர உதவிக்காக 24 மணி நேரமும் செயல்படும் +91-11-2397 8046 என்ற தொலைபேசி எண் மற்றும் ஒரு மின்னஞ்சல் ஐடி ncov2019@gmail.com ஆகியவற்றை அறிவித்துள்ளது.