கொரோனா 'ஹாட் ஸ்பாட்' பட்டியலில் உள்ள 'தமிழக' மாவட்டங்கள் எவை?... மத்திய அரசு 'அறிவிப்பு'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தமிழகத்தில் 22 மாவட்டங்களை கொரோனா பாதிப்பு அதிகம் பரவியுள்ள  மாவட்டங்களாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா 'ஹாட் ஸ்பாட்' பட்டியலில் உள்ள 'தமிழக' மாவட்டங்கள் எவை?... மத்திய அரசு 'அறிவிப்பு'...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 1242 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 118 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்திலுள்ள 22 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இந்த  ஹாட் ஸ்பாட் பகுதிகளில் கூடுதல் கவனம் எடுத்து மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதற்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலின்படி, சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், சேலம், நாகை ஆகிய தமிழக மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் தஞ்சை, திருவண்ணாமலை, காஞ்சி, சிவகங்கை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட்களாக மாறலாம் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.