'கொரோனாவால் பாதிக்கப்பட்ட'... 'முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேத்தன் சவுகான் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

'கொரோனாவால் பாதிக்கப்பட்ட'... 'முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு'...

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேத்தன் சவுகான் (73) இந்தியாவுக்காக  40 டெஸ்ட் போட்டிகளிலும், 7 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். மேலும், சுனில் கவாஸ்கருடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக விளையாடியுள்ள அவர் மராட்டியம் மற்றும் டெல்லி அணிக்காக ரஞ்சி டிராபி போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி நடந்த பரிசோதனையில் சேத்தன் சவுகானுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். பின்னர் அவருடைய உடல்நிலை மோசமடைந்ததால் ஹரியானாவின் குருகிராமில் உள்ள மேதந்தா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவருக்கு பல உறுப்புகள் பாதிப்படைந்து இருந்த நிலையில், வென்டிலேட்டர் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.

இருப்பினும் சேத்தனின் உடல்நிலை மோசமடைய, சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்ட சேத்தன் சவுகான்  உத்தர பிரதேசத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில் மந்திரியாக உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்