'திடீர் நெஞ்சுவலி'... சிகிச்சையின் போதே 'உயிரிழந்த' முதியவர்... 'பலியானோர்' எண்ணிக்கை '8 ஆக' உயர்வு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை சுமார் 415 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு, 144 தடை உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை அமல்படுத்தி கொரோனாவை கட்டுக்குள் வைக்க முயற்சித்து வருகின்றன.

'திடீர் நெஞ்சுவலி'... சிகிச்சையின் போதே 'உயிரிழந்த' முதியவர்... 'பலியானோர்' எண்ணிக்கை '8 ஆக' உயர்வு!

இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்து இருக்கிறது. இத்தாலியில் இருந்து மேற்கு வங்காளம் திரும்பிய 55 வயது முதியவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருக்கிறார். இதன் மூலம் கொரோனாவுக்கு மேற்கு வங்காளத்தில் முதன்முறையாக ஒருவர் பலியாகி இருக்கிறார். மேலும் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 8 ஆக அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.