அதிகரிக்கும் பாதிப்பு... புதிய கொரோனா 'ஹாட்ஸ்பாட்'களாக உருவெடுத்துள்ள மாநிலங்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

அதிகரிக்கும் பாதிப்பு... புதிய கொரோனா 'ஹாட்ஸ்பாட்'களாக உருவெடுத்துள்ள மாநிலங்கள்!

இந்தியாவை பொறுத்தவரை தற்போது கொரோனா வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. கடந்த 14 நாட்களில் மட்டும் சுமார் 1 லட்சம் பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. இந்தியாவின் மொத்த பாதிப்புகளில், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி மற்றும் குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் மட்டுமே 70 சதவீத பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் கடந்த சில நாட்களாக மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பீகார் மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் பாதிப்புகள் உயர்ந்துள்ளன.

இதேபோல் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் தமிழகத்தில் உயிரிழப்புகள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றன. இந்த 3 மாநிலங்களில் மட்டும் கடந்த வாரத்தில் 50-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் கடந்த சில வாரங்களாக, ஒவ்வொரு வாரமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

இதேபோன்ற நிலை கடந்த 2 வாரங்களாக பீகாரிலும், கடந்த வாரத்தில் கர்நாடகா, அரியானா மற்றும அசாம் மாநிலத்திலும் காணப்படுகிறது. ஒடிசா, ஆந்திரா மற்றும் காஷ்மீர் மாநிலத்திலும் கடந்த சில நாட்களாக தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது மட்டுமின்றி மேற்கு வங்கத்தின் கூச் பெஹர், ராஜஸ்தானின் பரத்பூர் மற்றும் ஜலவார், உத்தரகண்ட்டின் டேராடூன் ஆகிய மாவட்டங்கள் புதிய கொரோனா ஹாட்ஸ்பாட்களாக உருவெடுத்துள்ளன.

மற்ற செய்திகள்