'கொரோனா' அச்சத்தில்... 'ஊர்' திரும்பியவர்கள் பற்றி 'தகவல்' கொடுத்ததால்... 'இளைஞருக்கு' நேர்ந்த 'விபரீதம்'... 'பதறவைக்கும்' சம்பவம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வெளியூரிலிருந்து ஊர் திரும்பியவர்கள் பற்றி அதிகாரிக்கு தகவல் கொடுத்த இளைஞர் கடுமையாக தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.

'கொரோனா' அச்சத்தில்... 'ஊர்' திரும்பியவர்கள் பற்றி 'தகவல்' கொடுத்ததால்... 'இளைஞருக்கு' நேர்ந்த 'விபரீதம்'... 'பதறவைக்கும்' சம்பவம்...

பீகார் மாநிலம் சிதாமர்ஹி மாவட்டம் மதுல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்லு குமார் (20). இவருடைய கிராமத்திற்கு சமீபத்தில் மும்பையில் இருந்து 2 பேர் வந்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகித்த பாப்லு இதுபற்றி மாவட்ட உதவி எண்ணிற்கு உடனே தகவல் கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து தகவல் அளித்த பாப்லு மீது ஆத்திரமடைந்த அந்த இருவரும் ஒரு கும்பலுடன் வந்து அவரைக் கடுமையாக தாக்கியுள்ளனர். அதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவரும் போலீசார் இதுதொடர்பாக  7 பேரைக் கைது செய்துள்ளனர். இதற்கிடையே வெளியூரில் இருந்து ஊர் திரும்பிய இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்களுடைய  ரத்த மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.