இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பு மருந்தான 'COVAXIN' சோதனையில் வெற்றி!.. அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!.. அடுத்தது என்ன?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பு மருந்தான 'கோவேக்ஸின்' சோதனையில் வெற்றிபெற்றுள்ளது.

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பு மருந்தான 'COVAXIN' சோதனையில் வெற்றி!.. அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!.. அடுத்தது என்ன?

கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் மத்தியில் கடும்போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் பாரத் பயோடெக் என்ற நிறுவனத்தின் 'கோவேக்ஸின்' தடுப்பு மருந்து முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், பாரத்பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்த COVAXIN மருந்து ஹரியானாவில் 3 பேருக்கு செலுத்தி சோதனை செய்யப்பட்டது. அதில், மருந்தின் தன்மையை உடல் ஏற்றுக் கொண்டதாகவும், எந்தவிதமான பக்க விளைவும் இல்லை எனவும் ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவுத்துள்ளார்.

ஆகையால், மனிதர்களிடம் தடுப்பு மருந்தைச் செலுத்தி சோதனை செய்யும் முதல் கட்டத்தில் (Human trials) கோவேக்ஸின் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்