‘2 கோடி அமெரிக்கர்களுக்கு’ .. டிசம்பர் மாதத்துக்குள் வரும் ‘இனிய செய்தி’!.. வெளியான பரபரப்பு அறிக்கை!
முகப்பு > செய்திகள் > இந்தியா2 கோடி அமெரிக்கர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தனியார் பங்களிப்புடன் கூடிய அமெரிக்க கொரோனா தடுப்பூசி அமைப்பு தெரிவித்துள்ளது.
தனியார் பங்களிப்புடன் கூடிய அமெரிக்க கொரோனா தடுப்பூசி அமைப்பான Operation Warp Speed அண்மையில் ஒரு மாபெரும் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் Corona தடுப்பூசி போடப்படுவது குறித்த இந்த முக்கிய தகவலை தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் இதை தெரிவித்த, அந்த அமைப்பின் அறிவியல் ஆலோசகர் மோன்செப் சுலோய் அடுத்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் குறைந்தது இரண்டரை கோடி அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஃபைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்கள் உருவாக்கியுள்ள இந்த இரண்டு தடுப்பூசிகளும் இறுதிகட்ட பரிசோதனையில் இருப்பதாகவும் அவற்றை பயன்படுத்துவதற்கான அவசரகால அனுமதி அடுத்த மாதம் கிடைக்கலாம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மற்ற செய்திகள்