'போகாத, போகாதன்னு சொன்னனே'... 'மனைவி கிடந்த கோலம்'... ஒரு செகண்ட்டில் நடந்த விபரீதம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனாவின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அத்தியாவசிய காரணங்களைத் தவிர்த்து யாரும் வெளியில் செல்லக் கூடாது என மத்திய அரசு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய காரணங்களுக்கு வெளியில் வருபவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

'போகாத, போகாதன்னு சொன்னனே'... 'மனைவி கிடந்த கோலம்'... ஒரு செகண்ட்டில் நடந்த விபரீதம்!

இந்நிலையில் ஊரடங்கு அமலில் இருப்பதால் வெளியே செல்ல வேண்டாம் என மனைவி கூறிய நிலையில்,  அதைக் கேட்காமல் கணவர் வெளியே சென்றதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மங்களூரு அருகே பார்லியா பகுதியை சேர்ந்தவர், ரமீஷா பானு. இவருக்கும் அப்பாஸ் அலி என்ற ஆட்டோ ஓட்டுநருக்கும் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே ஊரடங்கு அமலில் இருப்பதால், அப்பாஸ் வீட்டிலிருந்துள்ளார். தொடர்ந்து வீட்டிலிருந்ததால் அருகில் இருக்கும் தனது மாமா வீட்டிற்குச் சென்று வருவதாகத் தனது மனைவியிடம் கூறியுள்ளார்.

ஆனால் ஊரடங்கு அமலில் இருக்கிறது, இந்த நேரத்தில் நீங்கள் போக வேண்டாம் என மனைவி மறுத்துள்ளார். ஆனால் மனைவியின் பேச்சைக் கேட்காமல் அப்பாஸ் தனது மாமா வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, அப்பாஸ் வெளியில் சென்று விட்டார். இந்நிலையில் சிறிது நேரம் கழித்து அப்பாஸ் வீடு திரும்பியுள்ளார். உடனே மனைவியைக் காணாமல் வீடு முழுவதும் தேடியுள்ளார். அப்போது ஒரு அறையில் மனைவி கிடந்த கோலத்தைப் பார்த்து அப்பாஸ் அதிர்ந்து போனார்.

அறையிலிருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் ரமீஷா பானு சடலமாகக் கிடந்தார். மனைவியின் பேச்சைக் கேட்காததால் தான், ரமீஷா பானு தற்கொலை செய்து கொண்டார், என அப்பாஸ் கதறி அழுதார். சம்பம் குறித்து அறிந்த காவல்துறையினர் ரமீஷா பானுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.