'ஊரடங்கில் பணக்காரர்களுக்கு அடித்த ஜாக்பாட்'... 'ஆனா மாச சம்பளக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும்'?... அதிரவைக்கும் அறிக்கை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா சூழலில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், பெரும் பணக்காரர்கள் எத்தகைய மாற்றத்தினை சந்தித்துள்ளனர் என்ற ஆய்வின் முடிவில் வெளியான தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

'ஊரடங்கில் பணக்காரர்களுக்கு அடித்த ஜாக்பாட்'... 'ஆனா மாச சம்பளக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும்'?... அதிரவைக்கும் அறிக்கை!

ஆக்ஸ்பாம் என்கிற லாப நோக்கற்ற அமைப்பு கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்துச் சமத்துவமில்லா வைரஸ் என்னும் பெயரில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் பெண்கள், விளிம்புநிலைச் சமுதாய மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு  உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவின் பெரும் செல்வந்தர்களுக்கும் அதன் கோடிக்கணக்கான திறமையற்ற தொழிலாளர்களுக்கும் இடையில் இருக்கும் வருமான ஏற்றத்தாழ்வுகளை மிக மோசமாக்கியுள்ளது.

கோடிக்கணக்கானோர் வேலையிழந்ததால் வறுமையிலும் பட்டினியிலும் வாடுவதாகக் குறிப்பிட்டுள்ளது. கல்வி, நலவாழ்வு, சிறந்த வாழ்க்கை ஆகியன கிடைப்பதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளது.

ஏப்ரல் 2020 மட்டும். ஊரடங்கின் போது  போது நாட்டின் பணக்காரர்களின்  செல்வம் 35 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 84 சதவீத குடும்பங்கள் பல்வேறு வகையான வருமான இழப்புகளை சந்தித்து உள்ளன. ஒவ்வொரு மணி நேரத்திற்கு 1.7 லட்சம் பேர் வேலை இழந்தனர் என்று அறிக்கை கூறியுள்ளது.

மார்ச் 18 முதல் டிசம்பர் 31 வரையான காலத்தில் உலகின் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 284 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளதாகவும், முதல் 10 பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பு மட்டும் 39 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் சமத்துவமின்மை கடுமையானது, தொற்றுநோய்களின் போது ஒரு மணி நேரத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி செய்ததை ஒரு திறமையற்ற தொழிலாளி செய்ய 10,000 ஆண்டுகள் எடுக்கும் என கூறப்பட்டு உள்ளது.

உலகளவில், கோடீஸ்வரர்களின் செல்வம் மார்ச் 18 முதல் டிசம்பர் 31, 2020 வரை 3.9 டிரில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் வறுமையில் வாடும் மொத்த மக்களின் எண்ணிக்கை 200 மில்லியனுக்கும் 500 மில்லியனுக்கும் இடையில் அதிகரித்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் 10 பணக்கார கோடீஸ்வரர்களில் செல்வத்தின் அதிகரிப்பு - பூமியில் உள்ள எவரும் வைரஸ் காரணமாக வறுமையில் விழுவதைத் தடுக்கவும், ஒரு கொரோனா தடுப்பூசிக்கு பணம் செலுத்தவும் போதுமானது ஆகும் என கூறப்பட்டு உள்ளது.

இத்தகைய ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய இந்திய அரசுக்கு அளிக்கப்பட்ட பரிந்துரைகளில், ஆக்ஸ்பாம் உடனடியாக குறைந்தபட்ச ஊதியங்களை திருத்தி, முறையான இடைவெளியில் அதிகரிக்க பரிந்துரைத்துள்ளது.

ரூ.50 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு இரண்டு சதவீத கூடுதல் வரி விதிக்கவும், தொற்றுநோய்களின் போது லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கு தற்காலிக வரியை அறிமுகப்படுத்தவும் அறிக்கை  அரசாங்கத்தை கோரி உள்ளது.

மேலும், கொரோனா ஊரடங்கின் போது அன்றாடங்காட்சிகள் நல்ல உணவுக்கே சிரமப்பட்ட நிலையில், பெரும் செல்வந்தர்களின் சொத்து மதிப்பு ரூ.284 லட்சம் கோடி உயர்ந்துள்ளது.

 

மற்ற செய்திகள்