'என்னங்க ஆன்லைன்ல விஸ்கி வாங்கலாம்'...'சந்தோஷத்தில் ஆர்டர் செய்த மனைவி'...இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஊரடங்கு உத்தரவால் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைனில் மது வாங்க ஆசைப்பட்டு பெண் ஒருவர் 1 லட்சம் இழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'என்னங்க ஆன்லைன்ல விஸ்கி வாங்கலாம்'...'சந்தோஷத்தில் ஆர்டர் செய்த மனைவி'...இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் தற்போது அடைக்கப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் மும்பை செம்பூரை சேர்ந்த பெண் ஒருவருக்கு மது குடிக்க வேண்டும் என தோன்றியுள்ளது. இதனால் ஆன்லைனில் மது வாங்க முடியுமா என தேடியுள்ளார்.

அந்த நேரம் பார்த்து ''நீங்கள் ஆர்டர் செய்தால் நாங்கள் வீட்டிற்கே வந்து மதுபானங்களை டெலிவரி செய்வோம்'' என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து அதில் இருந்த எண்ணிற்கு தொடர்பு கொண்ட அந்த பெண், எங்களுக்கு விஸ்கி வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது எதிர் முனையில் பேசியவர் வீட்டுக்கு மதுபானம் டெலிவிரி செய்ய ரூ.3 ஆயிரம் தரவேண்டும் என கூறினார். மேலும் பணத்தை இப்போதே தர வேண்டும் என கூறியுள்ளார்.

ஊரடங்கு நேரத்தில் நமக்கு மதுபானம் கிடைக்கிறதே என்ற சந்தோஷத்தில் இருந்த அந்த பெண், எதையும் யோசிக்காமல், பணத்திற்காக தனது கணவரின் ஏ.டி.எம். கார்டு விவரங்களை அந்த நபரிடம் கூறியுள்ளார். உடனடியாக அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.30 ஆயிரம் எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் எதற்காக 30 ஆயிரம் ரூபாய் எடுக்கிறீர்கள் என கேட்டுள்ளார். அப்போது அவர், ரூ.3 ஆயிரத்துக்கு பதிலாக தெரியாமல் ரூ.30 ஆயிரம் எடுத்துவிட்டதாக கூறினார்.

மேலும் அந்த பணத்தை உடனடியாக திரும்ப தருவதாகவும் கூறியுள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் பெண்ணின் கணவர் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் அபேஸ் செய்யப்பட்டது. அப்போது தான், வசமாக அந்த நபர் ஏமாற்றியது எந்த பெண்ணிற்கு தெரிய வந்தது. மது குடிக்க ஆசைப்பட்டு இப்பொது ஒரு லட்ச ரூபாய் போச்சே என புலம்பிய அந்த பெண், நடந்த சம்பவங்கள் குறித்து தனது கணவரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து சம்பவம் குறித்து அந்த பெண் தனது கணவருடன் திலக் நகர் போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பதியிடம் மோசடியில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர். ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி கிடையாது, எனேவ பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

மது வாங்க ஆசைப்பட்டு பெண் ஒருவர் ஒரு லட்ச ரூபாய் இழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CORONA, CORONAVIRUS, MUMBAI, COUPLE, LIQUOR, ONLINE, CORONA LOCKDOWN