'அறிகுறிகளே' இல்லாத 'கொரோனா தொற்று...' 'ஒரு வகையில் பாஸிடிவ்தான்...' "மருத்துவர்கள் கூறும் காரணம் என்ன?..."

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அறிகுறிகளே இல்லாமல் கொரோனா தொற்று ஏற்படுபவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் உறுதியாக இருப்பதைக் காட்டுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அத்தைகையோரிடம் வைரஸின் தாக்கம் குறைவாக இருக்கும் என்றும் குறிப்பிடுகின்றனர்.

'அறிகுறிகளே' இல்லாத 'கொரோனா தொற்று...' 'ஒரு வகையில் பாஸிடிவ்தான்...' "மருத்துவர்கள் கூறும் காரணம் என்ன?..."

இந்தியாவில் கொரோனா என்பது கொடிய வைரஸாக இல்லாமல் சாதாரண சிகிச்சையால் குணப்படுத்தக்கூடிய தன்மையில் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று ஒருவருக்கு ஏற்பட்டால் அதன் அறிகுறிகள் தெரிய வர 14 நாட்கள் ஆகும் என ஏற்கெனவே வந்த ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 80 சதவீதம் பேருக்கு அறிகுறிகளே இல்லாத நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், கொரோனா அறிகுறிகளே இல்லாமல் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடைய நோய் எதிர்ப்பு மண்டலம் உறுதியாக இருப்பதுதான். அத்தகையோரிடம் வைரஸ் தாக்கம் குறைந்த அளவே காணப்படுகிறது. மேலும் மற்ற நாடுகளை ஒப்பீடுகையில் இந்தியாவில் வைரஸின் வீரியம் மிகக் குறைந்த அளவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த 80 சதவீதத்தினருக்கு கொரோனா என்பது கொடிய வைரஸாக இல்லாமல் சாதாரண சிகிச்சையால் குணப்படுத்தக்கூடிய தன்மையில் உள்ளது. கொரோனவால் பாதித்தவர்களை அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியே அவர்களை பாதுகாக்க 50 சதவீதம் ஒத்துழைகிறது.

ஆனால் இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்களில் 75.3 சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். ஆகையால் இந்தியாவில் கொரோனா வைரஸின் வீரியம் சற்று குறைந்து இருப்பதாலும், ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் போது வைரஸ் உடனடியாக உடல் பாகங்களை சேதப்படுத்தி சளி, காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகளை உண்டாக்க வாய்ப்பில்லை என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.