‘ஹனிமூனில் இருந்து பெங்களூரு திரும்பிய’... ‘ஐடி நிறுவன கணவருக்கு கொரோனா’... ‘விமானம், ரயில் என பரப்பிய மனைவி’... பொங்கியெழுந்த நெட்டிசன்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹனிமூனுக்கு வெளிநாடு சென்றுவிட்டு பெங்களூர் திரும்பியபோது, கணவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட மனைவி தப்பி ஓடி விமானம், ரயில் என பொது இடங்களில் தொற்றை பரப்பிய சம்பத்தால் நெட்டிசன்கள் கொதித்தெழுந்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு, கடந்த மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து தனது 25 வயது மனைவியுடன், ஹனிமூனுக்கு சுவிட்சர்லாந்து, கிரீஸ், பிரான்ஸ் என்று சென்றுள்ளார். பின்னர், கடந்த 27-ம் தேதி விமானம் மூலம் மும்பைக்கு வந்து, அங்கிருந்து பெங்களூரு திரும்பியுள்ளனர். பின்னர் ஏற்பட்ட உலநலக்குறைவு காரணமாக ஊழியருக்கு நடத்திய சோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையே கணவனிடமிருந்து மனைவிக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகித்ததால், அவரது மனைவி பெங்களூரில் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுதுக் கொண்டிருந்தார். இந்நிலையில் மருத்துவமனை வளாகத்திலிருந்து தப்பிய அவரது மனைவி, பெங்களூரிலிருந்து டெல்லிக்கு விமானம் மூலம் பறந்து சென்றுள்ளார். டெல்லியிலிருந்து அந்த பெண் பெற்றோர் வசிக்கும் ஆக்ராவிற்கு ரயிலில் சென்றுள்ளார்.
கண்காணிப்பில் இருந்த பெண் காணாமல் போனதால், அந்த பெண்ணை தேடி பெற்றோர் வீட்டிற்கு சென்றனர். அங்கு பெற்றோர் உள்பட சுமார் 8 பேருடன் அந்தப் பெண் தங்கியதும் அதிர்ந்த அதிகாரிகள் மருத்துவ சோதனைக்கு வருமாறு அனைவரையும் அழைத்தனர். . ஆனால் ரயில்வே என்ஜீனியரான அவரது அப்பா உட்பட அனைவரையும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் மாவட்ட நீதிபதி உதவியுடன் அனைவரையும் மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
அதில் கூகுள் நிறுவன ஊழியரின் மனைவிக்கும் கொரோன தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவரது உறவினர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். மேலும் அந்தப் பெண் வந்த ரயில், விமானம் ஆகியவற்றில் கூட வந்த பயணிகளுக்கு கொரோனா தொற்று பரவி இருக்கலாம் என அனைவரையும் கண்காணிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவத்தால் கொதித்தெழுந்த நெட்டிசன்கள், தெரிந்தே பயணம் செய்த மனைவியை ஜெயிலில் போடுமாறு திட்டி வருகின்றனர். (படங்கள் சித்தரிக்கப்பட்டவை)
So an educated lady defied quarantine, flew to Delhi & took train to reach Agra, tests positive. And risked so many lives.
Few who came from Italy are demanding 5 star treatments during quarantine.
And they all will someday stand in crowd & say how bad government & politics is.
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) March 14, 2020
"she travelled by air, there is a high chance that passengers sitting near her in two rows back, front and side,
might also be infected with Covid-19.”
What a piece of shit. Put her in jail and try her for attempt to murder. Educated techie apparentlyhttps://t.co/dtINNaAKf9
— Ashu (@muglikar_) March 14, 2020
When Well Educated & Travelled Does This Kind of Stupidity Which Endangers Their Life and Other Too.
The infected #Google Techie wife fled #Bengaluru by air, took #Delhi-#Agra train to reach her home in UP. She now tested positive for #coronavirus. #coronavirusindia pic.twitter.com/vihlyujBCC
— Corona (@Corona_2019) March 14, 2020