"நவம்பர் மாதத்தில் கொரோனா உச்சத்துக்கு போகுமா?".. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் நவம்பர் மாதத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என்கிற செய்திக்கு இந்திய மருத்துவ கவுன்சில் மறுப்பு தெரிவித்துள்ளது.

"நவம்பர் மாதத்தில் கொரோனா உச்சத்துக்கு போகுமா?".. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம்!

இதுவரை இந்தியாவில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 424 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில், 9 ஆயிரத்து 520 பேர் உயிரிழந்துமுள்ளனர். இதனிடையே மார்ச் 25-ஆம் தேதி தொடங்கி 4 கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதோடு, தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அன்லாக் 1.0 என்கிற பெயரில் அமல்படுத்தப்பட்டுள்ள 5வது ஊரடங்கு இருக்கும் சூழலில், வரும் நவம்பர் மாதத்தில் கொரோனா உச்சத்தை அடையும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிகை விடுத்ததாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்த செய்தி தவறானது என்றும் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்