'ஏடிஎம் வழியாக வந்த கொரோனா...' '3 பேருமே ராணுவ வீரர்கள்...' 'எப்படி பரவியது என கண்டுபிடித்த குழு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒரே ஏடிஎம்மில் பணம் எடுத்த மூன்று ராணுவ வீரர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'ஏடிஎம் வழியாக வந்த கொரோனா...' '3 பேருமே ராணுவ வீரர்கள்...' 'எப்படி பரவியது என கண்டுபிடித்த குழு...!

உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸிற்கு இதுவரை சுமார் 2,726,000-திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 23,140 பேர் இந்த தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இதில் 5058 பேர் உடல்நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். 723 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அண்மையில் குஜராத் மாநிலம் பரோடாவில், பாதுகாப்புப் பணியில் ஈட்டுப்பட்டிருந்த மூன்று இந்திய ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூவருக்கும் கொரோனா வைரஸ் பரவியதை பற்றி தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். அவர்களது அன்றாட நிகழ்வை ட்ராக் ஹிஸ்டரியின் மூலம் உறுதி செய்த குழு, மூவரும் ஒரே நாளில் ஒரு ஏடிஎம்மை உபயோகித்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அடுத்தகட்டமாக அவர்கள் பயன்படுத்திய ஏடிஎம் சீல் செய்யப்பட்டு  கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. அரசின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த ஏடிஎம்மை பயன்படுத்திய பொதுமக்கள் தாங்களாக முன்வந்து தகவல்களை அளித்துள்ளனர். மேலும் பரோடா நகர அதிகாரிகள் பொதுமக்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் இந்த மூன்று பேருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த சக வீரர்களையும் தனிமைபடுத்தி வைத்துள்ளனர்.

இதேபோல் ஜம்மு - காஷ்மீரின் குப்வாராவில் உள்ள பட்டாலியனில் நர்ஸிங் உதவியாளராகப் பணிபுரிந்துவந்த மேலும் ஒரு ராணுவ வீரருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர், டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.