'தன்னலமற்று' சேவையாற்றிய 'செவிலியர்கள்...' 'ஒரே மருத்துவமனையில்' பணியாற்றிய... '40 பேருக்கு' நேர்ந்த 'பரிதாப நிலை...'
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்ட்ராவில் இயங்கி வரும் ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய 40 கேரள செவிலியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. இதுவரை அம்மாநிலத்தில், 881 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், மகாராஷ்டிராவில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனை ஒன்றில், பணியாற்றிய கேரளாவைச் சேர்ந்த 40 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மருத்துவமனையில் இதுவரை 51 பேருக்கு கொரோன வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 40 பர் கேரளாவிலிருந்து மஹாராஷ்ட்ராவுக்கு சென்று தங்கி செவிலியராக பணியாற்றியவர்கள் ஆவர். மும்பையில் உள்ள இந்த மருத்துவமனையில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டு 3 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவால் உயிரிழந்தோரிடம் இருந்து செவிலியர்களுக்கு தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கு பணியாற்றி வந்த 150-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, மத்திய-மாநில அரசுகள் மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என செவிலியர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.