5 ரூபாய்க்கு ஆசைப்பட்ட கான்ட்ராக்டர்.. ரூ. 1 லட்சம் அபராதம் போட்ட ரயில்வே.. ஒரே ஒரு வாட்டர் பாட்டில்தான் காரணம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தண்ணீர் பாட்டிலுக்கு கூடுதலாக 5 ரூபாய் வசூலித்த ஒப்பந்ததாரருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது ரயில்வே நிர்வாகம்.

5 ரூபாய்க்கு ஆசைப்பட்ட கான்ட்ராக்டர்.. ரூ. 1 லட்சம் அபராதம் போட்ட ரயில்வே.. ஒரே ஒரு வாட்டர் பாட்டில்தான் காரணம்..!

தினசரி ரயில்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இந்தியாவில் மிக அதிகம். ரயில் பயணங்களின்போது, சில ஒப்பந்ததாரர்கள் கூடுதலாக பணம் வசூலிப்பதாக அவ்வப்போது ரயில்வே நிர்வாகத்திடம் மக்கள் புகார் அளித்து வருகின்றனர். அந்த வகையில், தண்ணீர் பாட்டிலுக்கு கூடுதலாக 5 ரூபாய் வசூலித்த ஒப்பந்ததாரருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது ரயில்வே நிர்வாகம்.

உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சண்டிகர் சென்ற ரயிலில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. கடந்த 15 ஆம் தேதி சண்டிகரில் இருந்து ஷாஜகான்பூருக்கு சென்ற ஷிவம் பட் என்ற பயணி ரயிலில் தண்ணீர் பாட்டில் வாங்கியிருக்கிறார். அதில் விலையாக 15 ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. ஆனால், தினேஷ் என்ற அந்த ஊழியர் 20 ரூபாய் வசூலித்திருக்கிறார். இதனால் ஷிவம் அந்த விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

அப்போது, தனது மேலாளர் 20 ரூபாய் தான் வாங்கவேண்டும் என கூறியுள்ளதாக அந்த விற்பனையாளர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து. ஷிவம் இந்த சம்பவம் குறித்து ரயில்வே நிர்வாகத்துக்கு ட்விட்டர் மூலமாக புகார் அளித்திருக்கிறார். இதை அறிந்த ரயில்வே அதிகாரிகள் இதுகுறித்த நடவடிக்கையில் இறங்கினர். தினேஷின் மேலாளரான ரவிக்குமாரை 144 (1) எனும் ரயில்வே சட்டத்தின் கீழ் அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர். மேலும், அந்த ஒப்பந்ததாரருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கவும் மண்டல ரயில்வே மேலாளர் மன்தீப் சிங் பாட்டியா பரிந்துரைத்திருக்கிறார்.

இதனையடுத்து, உத்திர பிரதேசத்தை சேர்ந்த ஒப்பந்ததாரரான சந்திர மவுலி என்பவரிடத்தில் இருந்து ஒரு லட்ச ரூபாயை அதிகாரிகள் அபராதமாக வசூல் செய்திருக்கின்றனர். இதுகுறித்து பேசியுள்ள மண்டல ரயில்வே மேலாளர் மன்தீப் சிங் பாட்டியா,"சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடமிருந்து உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்பட்ட பிறகு அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது" என்றார்.

RAILWAY, WATERBOTTLE, IRCTC

மற்ற செய்திகள்